Search
  • Follow NativePlanet
Share

குவெப்பம் - வாழ்க்கையை புதிதாக உணருங்கள்!

3

குவெப்பம் நகரில் இரு நூற்றாண்டுகளுக்கு முன்பு ஜோஸ் பௌலோ என்பவர் இரண்டே இரண்டு தூண்களை மட்டும் கொண்டு கட்டிடம் ஒன்றை எழுப்பினார். அதன் பின்னர், மறுவாழ்வு பெற விரும்பும் குற்றவாளிகள் இந்த தூண்களை கடந்து சென்று புது வாழ்வை தொடங்குமாறு பௌலோ அறிவித்தார். அந்த மேன்ஷன் பலேசியா டோ டியோ என்று அழைக்கப்படுகிறது. இது பற்பல முறை புதுப்பிக்கப்பட்டு இன்று மிகவும் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது.

இந்த மேன்ஷன் இந்திய மற்றும் போர்த்துகீசிய கட்டிடக் கலைகளின் கலவையாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. இவ்வாறான வடிவமைப்பு இந்த மேன்ஷனுக்கு ஒருவித தனித்துவத்தை கொடுக்கிறது.

மேலும் உணவகம், நூலகம் மற்றும் வாயிலில் உள்ள ஹிந்து பாணி கத்தோலிக்க தேவாலயம் என்று அனைத்துமே சிறந்த முறையில் வகைப்படுத்தப்பட்டு கட்டப்பட்டுள்ளது. எனவே ஒருவர் கோவான் உணவு வகைகளை சுவைத்துக் கொண்டு மதிய நேரத்தை இன்பமயமாக கழிக்க இந்த இடம் சிறந்த தேர்வாகும்.

பலேசியா டோ டியோ, மார்கோ நகரத்திலிருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. அதோடு பனாஜி, வாஸ்கோ உள்ளிட்ட நகரங்களிலிருந்து கார்கள் அல்லது பைக்கை வாடகைக்கு எடுத்துக்கொண்டு  ஒருவர் சுலபமாக குவெப்பம் நகரை அடைந்து விடலாம்.

குவெப்பம் சிறப்பு

குவெப்பம் வானிலை

சிறந்த காலநிலை குவெப்பம்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது குவெப்பம்

  • சாலை வழியாக
    கோவாவை மும்பையிலிருந்து தேசிய நெடுஞ்சாலை 17 அல்லது மும்பை-கோவா நெடுஞ்சாலை மூலமாக அடையலாம். ஆனால் இந்த வழி உங்களை நீண்ட பயணத்துக்கு இட்டுச் செல்வதோடு, கொஞ்சம் ஆபத்தானதும் கூட. எனினும் மும்பையிலிருந்து புனே செல்லும் எக்ஸ்பிரஸ் வழியை பயன்படுத்தி, சதாரா நெடுஞ்சாலையை அடைந்து, அதன் பின்னர் சாவந்த்வாடியை அடைந்து விடலாம். அப்படி சாவந்த்வாடியை நீங்கள் அடைந்து விட்டால் அங்கிருந்து கோவா வருவதற்கு ஒரு சில நிமிடங்கள்தான் ஆகும். மேலும் மும்பை, புனே மற்றும் மற்ற மகாராஷ்டிர நகரங்களிலிருந்து ஏராளமான பேருந்துகள் கோவாவுக்கு இயக்கப்படுகின்றன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    இந்தியாவின் தெற்கு, வடக்கு, கிழக்கு, மேற்கு என்று அனைத்து பகுதிகளிலிருந்தும் கோவாவுக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் மும்பை மற்றும் கோவாவுக்கு இடையில் இயக்கப்பட்டு வரும் ரயில்களில் பயணம் செய்வதற்கு பயணிகள் அதிகம் விரும்புகின்றனர். இதற்கு இரவு நேரத்தில் பயணம் செய்வது பலருக்கு சௌகரியமாக இருப்பதே காரணம்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    மும்பை, டெல்லி, பெங்களூர் உள்ளிட்ட இந்தியாவின் பெருநகரங்களிலிருந்து தெற்கு கோவாவின் தபோலிம் விமான நிலையத்துக்கு எண்ணற்ற விமானங்கள் இயக்கப்படுகின்றன. எனினும் கோவாவில் பன்னாட்டு விமான நிலையம் இல்லாத காரணத்தால், வெளிநாட்டு பயணிகள் மும்பை அல்லது டெல்லி போன்ற நகரங்களுக்கு வந்த பின்புதான் கோவாவை அடைய முடியும்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
07 Sep,Mon
Check Out
08 Sep,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue