ராஜ்கோட்டில் உள்ள ராஷ்டிரியசாலா ஒரு ஆர்வமூட்டக் கூடிய சுற்றுலாத்தலமாகும். 1921-ம் ஆண்டில் மகாத்மா காந்தியால் துவங்கப்பட்ட இந்த பள்ளி, பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கெதிரான ஒத்துழையாமையை கடைபிடிக்கவும் மற்றும் இங்கு படிக்கும் மக்களுக்கு தேசிய கருத்துகளை புகட்டவும் பயன்படுத்தப் பட்டது.
ராஷ்டிரியசாலாவில் தற்பொழுது 'மேனுவல் ஆயில் பிரஸ்ஸிங்', பருத்தி மற்றும் கதர் நெய்தல் தொடர்பான கல்வி மற்றும் பயிற்சி திட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. காலை 9 மணியிலிருந்து மதியம் வரையிலும் இந்த பள்ளி நடத்தப்பட்டு வருகிறது.



Click it and Unblock the Notifications