ராஜோவ்ரி பகுதியின் முன்னாள் ஆட்சியாளரான மியான் ஹாது என்பவரால் 1855-ம் ஆண்டு தனிதார் கோட்டை கட்டப்பட்டது. இந்த கோட்டையை ராஜோவ்ரியை ஆண்டு வந்த ஜரால் அரசர்களின் கட்டிடங்களிலிருந்து எடுத்த மீதமுள்ள பொருட்களைக் கொண்டு கட்டியுள்ளார்கள்.
வரலாற்று ஆய்வாளர்களின் கருத்துப்படி, பால் வம்சத்தைச் சேர்ந்த இந்து அரசர்கள் இந்த பகுதியை ஆண்டு வந்திருக்கின்றனர். தோஹ்ரா படையினரை வெளியாட்களிடம் இருந்து காப்பதற்காகவே தனிதார் கோட்டையை கட்டியுள்ளனர்.
உயரமான இடத்தில் அமைந்துள்ளதால் சுற்றியுள்ள பகுதிகளை பாதுகாப்பு காரணங்களுக்காக கவனித்து வருவதற்கு மிகவும் ஏற்ற இடமாக இக்கோட்டை அமைந்துள்ளது. மேலும்,இங்கே விளையும் தானியங்களை உள்ளூர் மக்களின் வருவாய் முறையின் படி சேமித்து வைக்கும் இடமாகவும் தனிதார் கோட்டை விளங்கி வந் திருக்கிறது.



Click it and Unblock the Notifications