ராஜோவ்ரி மற்றும் பூஞ்ச் மாவட்டங்களின் வரம்பில் இருக்கும் நீர்த்தேக்கம் தான் பீர் பாஞ்சல் ஏரியாகும். இது கடல் மட்டத்தில் இருந்து 13000 முதல் 14000 அடிகளில் அமைந்துள்ளது.
இந்த பகுதியை அடையும் போது, சுற்றுலாப் பயணிகளுக்கு 900 சதுர கிலோமீட்டர்களுக்கு பரந்து விரிந்திருக்கும் 27 ஏரிகளின் காட்சிகள் கிடைக்கும். இந்த 27 ஏரிகளில் 7 ஏரிகள் மிகப் பெரியவையாகவும், பிற சற்றே சிறியதாகவும் இருக்கின்றன.
இந்த பகுதியின் மிகப்பெரிய ஏரியானது ஜம்முவிற்கு மிகவும் அருகில் உள்ளது. பாக் சார், அகல் தக்சினி, சாமர் சார், சுக் சார், பாடியாரன் சார்-I மற்றும் II, சமோட் சார், நன்டன் சார் ஆகியவை இவற்றில் பிரபலமான ஏரிகளாகும்.
பீர் பாஞ்சலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இதற்கு அருகிலுள்ள நூரி சான்ப் நீர்வீழ்ச்சிக்கும் சென்று வரலாம். மேலும் பீர் பாஞ்சல் சென்று திரும்பும் வழிகளில் இருக்கும் 7 ஏரிகளான கும் சார் ஏரி, கடோரி சார் ஏரி, நீல் சார் ஏரி, கல் தக்ஷினி ஏரி, சுக் சார் ஏரி மற்றும் நன்டன் சார் ஏரி ஆகிய ஏரிகளின் தொடர்ச்சிகளையும், கண்கவரும் பசும் புல்வெளிகளையும் சுற்றுலாப் பயணிகள் காண முடியும்.



Click it and Unblock the Notifications