இரமேஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடி செல்லும் வழியில் 3.5 கிமீ தொலைவில் ஜடா தீர்த்தம் அமைந்துள்ளது. தனுஷ்கோடிக்கு செல்லும் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் ஜடா தீர்த்தத்திலும் நீராடி செல்வார்கள்.
ஸ்ரீ இராமருடன் நெருங்கிய தொடர்புடைய இடமான இந்த தீர்த்தத்தில், இராவணனை கொன்று சீதா தேவியை மீட்டுக் கொண்டு அயோத்திக்கு செல்லும் வழியில் இராமர் நின்று சென்றதாக புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது.
இந்த இடத்தில் இராமர் உருவாக்கி பூஜித்த லிங்கம் 'இராமலிங்கம்' என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த இடத்தில் இராமர் தனது ஜடா என்ற சடைமுடியை அலசி பிராமண வதம் செய்த பாவத்தை களைந்தார். தனது பாவங்களை கழுவி சுத்தம் செய்த பின்னர் தான் இராமர் சிவலிங்கத்தை வணங்கினார்.
இராமேஸ்வரத்தை சுற்றியுள்ள பிற கோவில்களுடன் ஒப்பிடும் போது இந்த கோவில் மிகவும் சிறியதாகும். உண்மையில் காவேரி தீர்த்தம் என்று அழைக்கப்படும் மற்றுமொரு தீர்த்தத்திற்குள் இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது.
இது மட்டுமல்லாமல், பறவைகளின் அரசனாக இருந்த ஜடாயு இராவணனால் தாக்கப்பட்டு விழுந்து இறந்த இடமாகவும் இவ்விடத்தை சிலர் கருதகின்றனர்.



Click it and Unblock the Notifications