இராமேஸ்வரத்திலுள்ள ஸ்ரீ இராமநாதசுவாமி கோவிலிலிருந்து 3 கிமீ தொலைவிலேயே, காந்தமதனா பர்வதம் செல்லும் வழியல் சாட்சி அனுமான் கோவில் உள்ளது.
புராணங்களின் படி, அனுமான் தான் சீதாவைக் கண்டுபிடித்த நல்ல செய்தியை இவ்விடத்தில் வைத்து தான் இராமரிடம் சொன்னார். இந்த இடத்தில் அனுமான் தான் கொண்டு வந்திருந்த 'சாட்சி'களான சீதா தேவியின் சூடாமணி அல்லது ஆபரணங்களை வைத்து இந்த செய்தியை இராமரிடம் கூறினார்.
மேலும், இந்த செய்தியை கேள்விப்பட்ட இராமர் தன்னுடைய மனைவி உயிருடனிருப்பதை அறிந்து மகிழ்ச்சியால் அழுததாகவும் நம்பப்படுகிறது. இந்த இடத்தில் தான், கடுமையான சோதனைகள் மற்றும் துன்பங்களுக்கிடையில் சீதாவை கண்டறிந்து வரச் சென்ற அனுமானை தன்னுடைய உண்மையான 'பக்தர்' என இராமர் கூறினார்.
இந்த கோவிலுக்கு இராமர் மற்றும் அனுமானின் பக்தர்கள் ஒவ்வொரு வருடமும் வந்து செல்வார்கள். பல்வேறு சுற்றுலாப் பயணிகளும் காந்தமதனா பர்வதம் செல்லும் வழியில் இங்கு இறங்கி தங்களுடைய பிரார்த்தனைகளை நடத்திச் செல்கின்றனர். அனுமானை வழிபடுவதற்கு சிறந்த நாளாக கருதப்படும் செவ்வாய் கிழமைகளில், இந்த கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.



Click it and Unblock the Notifications