பாலு டேம் எனப்படும் இந்த சிறிய ஏரித்தேக்கம் சௌபாத்தியா பழத்தோட்டங்களிலிருந்து 3 கி.மீ கீழே அமைந்திருக்கிறது. இந்த ஏரிப்பகுதியிலிருந்து பனிமூடிய இமயமலைச்சிகரங்களை பயணிகள் நன்றாக பார்த்து ரசிக்கலாம்.
ஏரிக்கு அருகிலேயே அமைந்திருக்கும் அழகிய தோட்டப்பூங்காக்களில் ஓய்வெடுத்தபடி சுற்றிலும் விரிந்திருக்கும் மலையழகை கண்களால் பருக முடிவது இந்த ஸ்தலத்தில் விசேஷ அம்சம்.
இந்த ஏரித்தேக்கம் 1903ம் ஆண்டில் ஆங்கிலேய அரசாங்கத்தால் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. வருட முழுவதும் சுற்றுலாப்பயணிகள் அனுமதிக்கப்படும் இந்த ஏரிப்பகுதி கூடாரத்தங்கலுக்கும் ஏற்றதாக காணப்படுகிறது.



Click it and Unblock the Notifications