குமாவூங் ரெஜிமெண்டல் சென்டர் மியூசியம் அன்ட் மெமோரியல் எனப்படும் இந்த நினைவகம் மற்றும் அருங்காட்சியகம் ராணிக்கேத் நகரில் முக்கியமான சுற்றுலா அம்சமாக திகழ்கிறது.
நாட்டிற்காக போரில் உயிர்நீத்த வீரர்களின் நினைவாக 1974ம் ஆண்டு இந்த நினைவகம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் இங்கு மரியாதை அணிவகுப்பும் நடத்தப்படுகிறது.
இந்த வளாகத்தில் 1978ம் ஆண்டு உருவாக்கப்பட்ட அருங்காட்சியகத்தில் இப்பகுதியின் பாரம்பரிய சின்னங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. ஜான்சி ராணியின் வெள்ளி செங்கோல், 1962ம் வருடத்திய சீன துப்பாக்கிகள் மற்றும் ஜப்பாணிய வயர்லெஸ் டெலிபோன் போன்றவற்றை இங்கு பார்வையாளர்கள் காணலாம்.
வெவ்வேறு போர்களில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் மற்றும் ஜெனரல் டி. என். ரய்னாவின் சவப்பெட்டி ஆகியவையும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கார்கில் போர் குறித்த சில முக்கிய ஆவணங்களும் இங்கு வைக்கப்பட்டிருக்கின்றன.



Click it and Unblock the Notifications