ராணிக்கேத் பகுதியில் உள்ள முக்கியமான ஷாப்பிங் வளாகமாக இந்த ‘மால்’ அமைந்திருக்கிறது. பயணிகள் இங்கு ட்வீட் சால்வைகள், உல்லன் சட்டைகள், குர்த்தாக்கள் மற்றும் அங்கிகளை வாங்கிக்கொள்ளலாம்.
இந்த மார்க்கெட் பகுதி தரமான பருத்தி துணிவகைகள், உல்லன் மற்றும் கைவினைப்பொருட்களுக்கு பிரசித்தமாக அறியப்படுகிறது. இவை யாவுமே மலிவான விலையில் கிடைக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் சந்திக்கும் இடமாகவும் இந்த இடம் பயன்படுகிறது. சந்தடி மிகுந்த சதர் பஜாரோடு ஒப்பிடும்போது ஷாப்பிங்கிற்கு மிகவும் ஏற்ற இடம் இந்த ‘மால்’ மார்க்கெட் என்று சொல்லலாம்.



Click it and Unblock the Notifications