சுர்வல் ஏரி எனப்படும் இந்த பருவகால ஏரி ரணதம்போரிலிருந்து 25 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. பலவிதமான பறவைகள் இந்த ஏரிக்கு வருகை தருகின்றன. நவம்பர் முதல் மார்ச் வரையிலான காலத்தில் இந்த ஏரி வனப்புடன் காட்சி அளிக்கிறது.
குளிர்காலத்தில் பலவிதமான புலம்பெயர் பறவைகளும் இந்த ஏரியைத் தேடி வருகின்றன. கொக்குகள், நாரைகள், ஃபிளாமிங்கோ, பழுப்புக்கால் வாத்து ஆகியவை இவற்றில் குறிப்பிடத்தக்கவை.
இந்த ஏரிக்கரையில், பறவைகளின் இனிமையான கீச்சொலிகள், தங்கமயமான சூரிய உதயம் மற்றும் இதமான சூரிய அஸ்தமனம் போன்றவை இயற்கை ரசிகர்களின் மனதை கொள்ளை கொள்ளும் அம்சங்கள் ஆகும்.



Click it and Unblock the Notifications