Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள்» ரின்சென்போங்

ரின்சென்போங் - ஆன்மா ஆனந்தமடையும் அற்புத பயணம்!

6

மேற்கு சிக்கிமிலுள்ள அடர்ந்த காடுகளில் அமைந்துள்ள இந்த ரின்சென்போங் அதனை சுற்றியுள்ள அழகிய மலைகளுக்காகவும் சுற்றுச் சூழலுக்காகவும் புகழ் பெற்று விளங்குகிறது. கடல் மட்டத்திலிருந்து 5576 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த நகரம், சிறுதூரம் நடை பயணம் மேற்கொள்ள சிறந்த இடமாக இருக்கும்.

ரின்சென்போங்கிலிருக்கும் நோக்கும் கோணங்கள்

ரின்சென்போங் அதன் சுற்றுச் சூழலுக்கும் இயற்கை அழகிற்கும் மட்டும் பெயர் பெற்றது அல்ல. இந்த இடத்தில் இருந்து கஞ்சன்சங்காவின் மலைத் தொடர்களின் பரப்பை சுற்றுலாப் பயணிகள் கண்டுக் களிக்கலாம்.

நெருக்கடியான கஞ்சன்சுங்கா நகரத்திலிருந்து கஞ்சன்சுங்கா மலைகளை ரசிப்பதற்கு பதிலாக ரின்சென்போங் என்ற அமைதியான இடத்திலிருந்து கஞ்சன்சுங்கா மலைகளை கண்டுக் களிக்கலாம்.

ரிசென்போங்கின் வரலாற்று முக்கியத்துவம்

ரின்சென்போங் வரலாற்றில் முக்கியத்துவம் பெற்ற நகரமாகும். இந்த இடத்தில் தான் சிக்கிமின் சோக்யல்களுக்கும், வெள்ளையர்களுக்கும் போர் நடந்தது. இந்த போரின் போது லேப்ச்சா என்னும் சிக்கிமின் உள்ளூர் பழங்குடியினர், அங்கு உள்ள ஒரு ஏரியில் நஞ்சைக் கலந்தனர்.

அப்போது அந்த சுற்று வட்டாரத்தில் தண்ணீருக்கு இந்த ஏரியே மூலமாக இருந்ததால், அதில் தண்ணீர் பருகிய பல ஆங்கிலேயர்கள் மரணம் அடைந்தனர். இன்றைய தேதி வரை இந்த ஏரி நச்சுத் தன்மையுடன் தான் விளங்குகிறது. எனவே இந்த ஏரியை "பிக்ஹ்-போக்ஹ்ரி" என்றும் அழைப்பர். இதற்கு நஞ்சு கலந்த ஏரி என்று பொருளாகும்.

ரின்சென்போங்கில் உள்ள சுற்றுலா ஈர்ப்புகள்

ஓவியம் போல் காட்சி தரும் இந்த இடத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அதன் அழகில் மயங்கி இங்கே அதிக காலம் இருக்க விரும்புவர்.

வளமான அழகை தவிர இங்கே சுற்றிப் பார்க்க சில புகழ் பெற்ற தலங்களும் உள்ளன. ரின்சென்போங் மடம், மக்கி தாரா மற்றும் ரபீந்தர ஸ்ம்ரிதி வான் போன்றவைகள் தான் ரின்சென்போங்கின் முக்கிய சுற்றுலாத் தலங்கள்.

ரின்சென்போங் சிறப்பு

ரின்சென்போங் வானிலை

சிறந்த காலநிலை ரின்சென்போங்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது ரின்சென்போங்

  • சாலை வழியாக
    காங்டாக்கிலிருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ள லேக்ஷிப் என்ற இடத்திற்கு மிக அருகில் தான் ரின்சென்போங் அமைந்துள்ளது. இங்கு ஜீப், டாக்சி மற்றும் தனியார் வாகனங்கள் மூலமாக வந்தடையலாம்.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    ரின்சென்போங்கிற்கு மிக அருகில் இருக்கும் இரயில் நிலையம் சிலிகுரியில் மட்டும் தான் உள்ளது. இங்கிருந்து மாநிலத்தில் உள்ள முக்கிய நகரங்களுக்கு இரயில் சேவைகள் உள்ளன.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    சிலிகுரி அருகில் இருக்கும் பாக்டோக்ரா விமான நிலையம் தான் ரின்சென்போங்கிற்கு மிக அருகில் இருக்கும் விமான நிலையம். இந்த விமான நிலையத்திலிருந்து மும்பை, சென்னை, குவாஹ்டி, டெல்லி மற்றும் கொல்கத்தாவிற்கு விமான சேவைகள் உள்ளன. மேலும் சில சர்வதேச விமான சேவைகளும் இங்கு வழங்கப்படுகின்றன.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
11 Mar,Wed
Return On
12 Mar,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
11 Mar,Wed
Check Out
12 Mar,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
11 Mar,Wed
Return On
12 Mar,Thu