ரொஹ்ருவில் சுற்றுலாப்பயணிகளை மகிழ்விக்கும் விஷயங்களில் ஒன்று மீன்பிடிப்பு ஆகும். பாப்பார் நதிக்கரையில் அமைந்துள்ள இந்த நகரம், நன்னீர் மீன்பிடிப்பிற்கு பெயர் பெற்ற இடமாகும். ரெயின்போ ட்ரௌட் மற்றும் பழுப்பு ட்ரௌட் ஆகிய இரண்டு வகைகளுமே இந்த நதிகளில் கிடைக்கும்.
சன்டாசு, திக்ரி மாண்டில் மற்றும் தாம்வாரி ஆகியவை இங்கே அமைந்துள்ள புகழ் பெற்ற மீன்பிடி தளங்களாகும். மாக்சீயர் என்பது ரொஹ்ரு நகரத்திற்கு அருகில் உள்ள தட்டாபனி பகுதியில் அமைந்துள்ள மற்றுமொரு மீன் வகையாகும்.



Click it and Unblock the Notifications