Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ரோயிங் » ஈர்க்கும் இடங்கள் » நிஜோமாகாட்

நிஜோமாகாட், ரோயிங்

16

ரோயிங்கிலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள நிஜோமாகாட் ஒரு நேர்த்தியான சுற்றுலாத் தலமாகும். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடம் நிஸாம்காட் என்றும் அழைக்கப்படுகிறது. ஆங்கிலேயர்களால் பத்தொன்பதாம் நூற்றாண்டில் நிறுவப்பட்டுள்ள இதற்கு, ஆங்கிலேய அரசியல் அதிகாரியான ஜே.எஃப். நீதம் என்பவரின் பெயரே சூட்டப்பட்டுள்ளது.

நிஜோமாகாட், மலைகளுக்குச் செல்ல ஆங்கிலேயர்களுக்கு ஒரு நுழைவுவாயிலாக இருந்துள்ளது. அதன் வரலாற்று முக்கியத்துவத்துக்காக மட்டுமல்லாது, நிஜோமாகாட் அதன் இயற்கைக் காட்சிகளுக்காகவும் பிரசித்தி பெற்றதாகும்.

இங்கு பச்சைப் பசேலென்று விரியும் தாவரப் பரப்பு, அதன் சுற்றுப்புறத்தை புத்துணர்வோடு வைத்துள்ளது. ராட்சத மலைகள் மற்றும் பாறைகள் கொண்ட நிலப்பரப்பினால் சூழப்பட்ட இந்த இடத்தின் ஊடாகப் பாய்ந்து செல்லும் ஆறு, சுற்றுலாப் பயணிகளை இவ்விடத்தை கட்டாயமாக வந்து பார்க்கத் தூண்டுகிறது.

ரோயிங் நகரம் தோணி மூலமாக தம்பக்குடன் இணைக்கப்படுகிறது; இந்த தோணி சவாரி சுற்றுலாப் பயணிகளால் பெரிதும் விரும்பப்படுகிறது. ஆக்ரோஷமாக ஓடும் ஆற்றின் பாய்ச்சலால் இமாலய பாறைகளில் வியக்க வைக்கும் பல வடிவங்கள் உருப்பெற்றுள்ளன. நிஜோமாகாட்டிலிருந்து பார்க்கும்போது மொத்த மலைத்தொடரும் நம் பார்வையில் பதிவது கொள்ளை அழகு.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
18 Aug,Tue
Return On
19 Aug,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
18 Aug,Tue
Check Out
19 Aug,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
18 Aug,Tue
Return On
19 Aug,Wed