Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ரோயிங் » ஈர்க்கும் இடங்கள் » மெஹாவோ வனவிலங்கு சரணாலயம்

மெஹாவோ வனவிலங்கு சரணாலயம், ரோயிங்

16

பசுமை நிறைந்த வெளியில், பரந்து விரிந்து காணப்படும் மலைத் தொடர்களுக்கு மத்தியில் அமைந்திருக்கும் மெஹாவோ வனவிலங்கு சரணாலயம், இங்கு வரும் பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தளிக்கிறது.

மேலும், இது விஞ்ஞானிகள், உயிரியலாளர்கள் மற்றும் தாவரவியலாளர்கள் ஆகியோருக்கு மிக உபயோகமானதொரு ஆராய்ச்சி மையமாகவும் விளங்குகிறது. இப்பகுதி, தாவரம் மற்றும் விலங்கின வளங்களோடு, பல ஏரிகளையும் கொண்டுள்ளது.

இச்சரணாலயத்தின் காடுகள் நான்கு முக்கியப் பிரிவுகளாக பகுக்கப்படுகின்றன: டிராபிகல் எவர்கிரீன் காடுகள், சப்-டிராபிகல் மற்றும் டெம்பரேட் காடுகள், டெம்பரேட் அகல இலைக் காடுகள் மற்றும் டெம்பரேட் ஊசியிலைக் காடுகள் ஆகியவையே அப்பிரிவுகளாகும்.

இக்காடுகள் பலவகை பறவைகள், மிருகங்கள் மற்றும் பூச்சிகளுக்கு அடைக்கலம் வழங்கும்  சுவாரஸ்யமான பல தாவரங்களைக் கொண்டுள்ளன. இதனால் மெஹாவோ வனவிலங்கு சரணாலயம் ஒரு அழகிய சுற்றுலாத் தலமாக மிளிர்கிறது.     

இந்த சரணாலயத்தில் வாழும் சில முக்கியமான பாலூட்டிகள், புலி, சிறுத்தை, கருஞ்சிறுத்தை, மீன்பிடி பூனை, காட்டுப் பூனை, புள்ளிகள் கொண்ட புனுகு பூனை, காட்டு நாய், மஞ்சள் வயிறுடைய மரநாய், பர்மிய மரநாய், வளைக்கரடி, கீரிப்பிள்ளை, மலாய் மர மூஞ்சூறு, சாம்பார் மான், குரைக்கும் மான், இந்திய யானை, அஸ்ஸாமிய குரங்கு, வாலற்ற பாலுண்ணி வகை பிராணி, இமாலய கருங்கரடி, இந்திய முள்ளம்பன்றி, சிவப்பு பாண்டா, கஸ்தூரி மான், பனி சிறுத்தை, இந்திய மான்வகை போன்றவையாகும்.

மெஹாவோ வனவிலங்குகள் சரணாலயத்தில் காணப்படும் சில வகை பறவையினங்கள் வாத்து வகைகள், பெரிய நெட்டைக்காலி, கிளுவை வாத்து, இமாலய பலவண்ண மீன்கொத்தி, நீலத்தொண்டை கூக்குருவான், ஜப்பானிய ஆஃபின்ச், செந்தலை கொண்ட சிரிக்கும் த்ரஸ்ட், பெரிய பலவண்ண ஹார்ன்பில், கருநிற பிடரி கொண்ட பிட்டா, பெரிய ராக்கெட் வால் கரிச்சான், புள்ளிகள் கொண்ட குட்டை வால் ரென்பாப்லர், பச்சை குண்டு கரிச்சான் போன்றவையாகும்.

இந்த சரணாலயத்தில் கருநாகம், கட்டுவிரியன், கோப்ரா நாஜா நாஜா, ராஜ நாகம், குழி விரியன், மலைப்பாம்பு, சாரைப்பாம்பு, இந்திய கரு நாகம், இமாலய பூனைப் பாம்பு, பச்சை சாரைப்பாம்பு போன்ற விஷத்தன்மை வாய்ந்த மற்றும் விஷத்தன்மை அல்லாத பாம்பு வகைகள் பலவும் காணப்படுகின்றன.

மேற்கூறிய விலங்கினங்கள் அல்லாது, மெஹாவோ வனவிலங்குகள் சரணாலயம் அபரிமிதமான அளவு மீன்கள் மற்றும் பட்டாம்பூச்சிகளையும் கொண்டுள்ளது.           

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
10 Jul,Fri
Return On
11 Jul,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
10 Jul,Fri
Check Out
11 Jul,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
10 Jul,Fri
Return On
11 Jul,Sat