கீரத்பூர் சாஹிப் அதன் புகழ் வாய்ந்த கடந்த காலம் மற்றும் புனிதமான குருத்வாராக்களுக்கு பெயர் போனதாகும். சீக்கியர்கள் இறந்து போன தங்கள் சொந்தங்களின் அஸ்தியை கரைக்கும் இடமாகிய குருத்வாரா படல் புரி இவ்விடத்தின் பிரசித்தி பெற்ற அடையாளமாகும்.
ஆறாவது சீக்கிய குருவாகிய குரு ஹர்கோவிந்த் சாஹிப் ஜி அவர்களால் 1627 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது இந்த இடம். குரு ஹர் ராய் மற்றும் குரு ஹர்க்ரிஷண் ஆகியோரின் பிறப்பிடமான கீரத்பூர் சாஹிப்புக்கு, முகாலயப் பேரரசரான ஔரங்கசீப்பினால் தில்லியில் கொல்லப்பட்ட ஒன்பதாவது சீக்கிய குருவான குரு ஸ்ரீ தேக் பஹதூரின் தலை கொண்டு வரப்பட்டது.
இந்த இடத்தில் தான் குருத்வாரா பாபங்கார் சாஹிப் கட்டப்பட்டிருக்கிறது. புராணங்களின் படி, சுமார் 800 ஆண்டுகள் வரையிலான மிக நீண்ட ஆயுளை வரமாகப் பெற்ற முஸ்லீம் துறவியான பீர் புத்தன் ஷாவுக்கும் இந்த நகரோடு சம்பந்தம் உள்ளது.
குருத்வாராக்கள் தவிர்த்து, இந்த இடம் சில பிரபலமான கோயில்கள் மற்றும் தர்காக்களையும் கொண்டுள்ளது. இந்நகரம் ரூப்நகரிலிருந்து சுமார் 17 கி.மீ. தொலைவில் நங்கல்-ரூப்நகர்-சண்டிகர் சாலையில் (தேசிய நெடுஞ்சாலை 21) அமைந்துள்ளது.



Click it and Unblock the Notifications