கல்ஸா பாரம்பரிய நினைவக வளாகம் என்று முன்னர் அறியப்பட்ட விராசத்-இ-கல்ஸாவை கட்டுவதற்கு சுமார் 13 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கின்றது (2011 ஆம் ஆண்டில் இது நிறைவடைந்துள்ளது).
இந்த அருங்காட்சியகம் சீக்கிய மதத்திற்கான அஸ்திவாரமும், அதனைத் தொடர்ந்து கல்ஸா பந்த்தும் அமையக் காரணமாக இருந்த பல்வேறு நிகழ்வுகளைப் பற்றிய உள்ளார்ந்த தகவல்களை சுற்றுலாப் பயணிகள் நன்கு உணரச் செய்கின்றது.
சுமார் 400 பேர் உட்காரக்கூடிய இருக்கை வசதி கொண்ட ஒரு அரங்கம், ஒரு நூலகம் மற்றும் பொருட்காட்சியகங்கள் ஆகியவையும் இந்த அருங்காட்சியகத்தில் காணப்படுகின்றன.
இந்த இடத்தின் வடிவமைப்பு, நவீன கால கட்டுமானம் மற்றும் கோட்டை கட்டுமான பாணிகளின் கலவையாகக் காட்சியளிக்கிறது. உள்ளூரிலிருந்து எடுக்கப்பட்டு பதிக்கப்பட்டுள்ள தேன் நிற கற்கள் கொடுக்கும் கரடுமுரடான தோற்றம் இந்த கட்டிடத்தின் ஒட்டுமொத்த தோற்றத்திற்கு மேலும் அணி சேர்ப்பதாகத் திகழ்கிறது.
விராசத்-இ-கல்ஸாவைக் காண விரும்பும் சுற்றுலாப் பயணிகள், செவ்வாய் முதல் ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 9:30 மணிக்கும் பகல் 4 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் செல்லலாம்.



Click it and Unblock the Notifications