பனைமரத்துப்பட்டி ஏரி, அப்பெயரிலேயே அமையப்பெற்றுள்ள கிராமத்தில், இயற்கையாக அமைந்துள்ள ஒரு ஏரியாகும். சேலம் புறநகரில் உள்ள இந்த கிராமம், சேலம் நகரின் பல பகுதிகளுக்கும் கொண்டு செல்லப்படும் தண்ணீரின் ஆதாரமாக உல்ளது.
மேட்டூர் அணை கட்டப்படுவதற்கு முன்பு, இந்த ஏரி தான் சேலம் மக்களின் குடிநீர் தேவைகளுக்கு ஆதரமாக இருந்திருக்கின்றது. இந்த ஏரி அதன் அழகான இயற்கை காட்சிகளுக்கு மிகவும் புகழ்பெற்றது.
“வேடந்தாங்கல்” என்றும் அழைக்கப்படுகின்ற இந்த ஏரி, பறவை கண்காணிப்பாளர்களிடையே பிரபலமாக உள்ளது. தற்போது, இவ்வேரியில் இருந்து நிரம்பி வழியும் நீரை, விவசாயிகள் தங்கள் பாசனத் தேவைகளுக்கு உபயோகப்படுத்திக் கொள்கின்றனர். இதனால் இந்த ஏரியை இயற்கையின் பெருங்கொடையாக விவசாயிகள் கொண்டாடுகின்றனர்.



Click it and Unblock the Notifications