நகரின் மத்தியில் இருந்து சுமார் 2 அடி தூரத்தில் அமைந்துள்ள இக்கோயில், 400 வருட பழமை வாய்ந்தது. நகரின் பரபரப்பான தெருக்களின் மத்தியில் இச்சிறு கோயில் உள்ளது.
மூலவரான கணபதி, இராஜ கோலத்தில் இருப்பதனாலயே இக்கோயிலுக்கு இப்பெயர் வழங்கப்பட்டு வருகிறது. நகரின் மிகப் பிரபலமான கோயில்களுள் ஒன்றான இக்கோயில், பக்தர்கள் கூட்டம் நிறைந்து காணப்படுகிறது.
இக்கோயிலின் மூலவரான கணபதி, பக்தர்களின் வேண்டுதல்களைக் கட்டாயமாக நிறைவேற்றுவார் என்று நம்பப்படுகிறது. இதனாலேயே இக்கோயில் மிகவும் புகழ் பெற்றதாக விளங்குகிறது.



Click it and Unblock the Notifications