சங்ககிரி கோட்டை, சேலம் நகரிலிருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இது, வரலாற்று சிறப்புமிக்க இடமாகும். சங்ககிரி மலையில் அமைந்துள்ள இக்கோட்டை, சுமார் 40 அடி உயரத்துடன், 10 சுற்றுப்புறச் சுவர்கள், ஏகப்பட்ட கோயில்கள், மசூதிகள் மற்றும் நடைபாதைகளைக் கொண்டுள்ளது.
இக்கோட்டையை ஆக்கிரமித்திருந்த திப்புசுல்தான் மற்றும் தீரன் சின்னமலை ஆகியோரின் ஆயுதங்கள், துப்பாக்கிகள் மற்றும் நகைகள் போன்ற வரலாற்று சிறப்பு மிக்க பொருள்களை காணலாம்.
ஆடிப்பதினெட்டு அன்று, இக்கோட்டையில் வைத்து தீரன் சின்னமலை தூக்கிலிடப்பட்டார். அவரது இறப்புக்குப் பின் ஆங்கிலேயர்கள், இக்கோட்டையை ஆக்கிரமித்து தங்கள் தலைமையகமாக மாற்றினர்.
இக்கோட்டைக்குப் போகும் வழியில் உள்ள புனித அந்தோணி தேவாலயத்திற்கும் சென்று பார்க்கலாம். இப்பகுதியின் வரலாறு மற்றும் கட்டடக்கலையில் ஆர்வமுள்ளவர்கள், இக்கோட்டைக்கு கட்டாயம் சென்று வரலாம்.



Click it and Unblock the Notifications