சேலத்தின் கடைகளில் பொருட்கள் வாங்குவதே ஒரு இனிய அனுபவமாக இருக்கும். சேலம், நுகர்வோரின் சொர்க்கமாகத் திகழ்கிறது. உள்ளூரில் மட்டுமின்றி நாடு முழுவதிலும், மிகப் பிரபலமான பெண்களின் அணிகலனான வெள்ளிக் கொலுசுகள் இங்கு தயாராகின்றன.
இது மட்டுமின்றி, புகழ்பெற்ற துணி உற்பத்தி மையமாகவும் விளங்குகிறது. பருத்தி மற்றும் பட்டுத் துணிகள் இங்கு உற்பத்தியாகி, பல இடங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இங்குள்ள “லேய் பஜார்” என்றழைக்கப்படும் பிரபலமான சந்தை, வாடிக்கையாளர்களால் நிறைந்து காணப்படுகிறது. உங்களின் சேலம் வருகை இங்கு வராமல் நிறைவடையாது.



Click it and Unblock the Notifications