சுற்றுலாப் பயணிகள் காண வேண்டிய மாபெரும் சுற்றுலாத் தலமாக ஹிராகுட் அணை உள்ளது. மாபெரும் மகாநதியின் குறுக்காக கட்டப்பட்டுள்ள இந்த அணை காணத்தகுந்த இடமாகும்.
சம்பல்பூரில் இருந்து 15 கிமீ தொலைவிலேயே உள்ள இந்த இடத்திற்கு ஒரே நாளில் சுற்றுலா சென்று வந்து விட முடியும். 1957-ம் ஆண்டு வாக்கில் கட்டப்பட்ட இந்த அணை, மனிதர்களால் உருவாக்கப்பட்ட அணைக்கட்டுகளிலேயே மிகவும் நீளமானதாகும்.
26 கிமீ நீளத்திற்கு கட்டப்பட்டுள்ள இந்த அணைக்கட்டு முடிவற்ற இடமாகவே காட்சியளிக்கிறது. இந்த அணை கட்டப்பட்ட போது உருவாக்கப்பட்ட செயற்கை ஏரி, சோர்வடைந்த கண்களை புத்துணர்ச்சி கொள்ள வைக்கும் வல்லமை கொண்ட இடமாகும்.
கண்காணிப்பு கோபுரங்கள், காந்தி மினார் மற்றும் நேரு மினார் ஆகியவை ஏரியின் இரு புறங்களிலும் உள்ள நிலப்பகுதிகளின் சுற்று வட்டக் காட்சிகளை காண உதவும் இடங்ககாளகும்.
விவசாயப் பண்ணைகள், கால்நடைகள் மற்றும் மீனாவர்கள் ஆகியோர் இந்த பகுதியின் அமைதியை நிலைநாட்டுபவர்களாக உள்ளனர். நீர்;த்தேக்கம் முழுமையாக நிறைந்திருக்கும் மழைக்காலத்தில் இந்த அணைக்கட்டிற்கு வருவது நல்லது.



Click it and Unblock the Notifications