மகாநதி என்றால் 'பெரிய நதி' என்று பொருளாகும். 858 கிமீ நீளமுள்ள இந்த நதி உண்மையில் மிகப்பெரிய நதியே! சுட்டிஸ்கார் மற்றும் ஒடிசா மாநிலத்தவர்களின் வாழ்வாதாரமாகவும், மற்றும் இன்றியமையாத படிவுகளை கொண்டிருப்பதாகவும் மகாநதி உள்ளது.
இந்த நதி முழுவதுமே பல்வேறு அணைக்கட்டுகள் கட்டப்பட்டுள்ளதால், படகு போக்குவரத்திற்கு ஏற்றதாக இந்நதி இல்லை. மழைக்காலத்தில் மட்டுமே ஆர்ப்பரித்து ஓடும் இந்நதி, பிற நாட்களில் ஒரு அகலாமான கால்வாய் அல்லது ஓடை போன்றும், இரு புறங்களிலும் பெரும் மணற்பரப்பையும் கொண்டிருக்கும்.
பசுமையான நிலப்பகுதிகளால் சூழப்பட்டிருக்கும் இந்நதியின் வளமான கண்கவரும் சுற்றுச்சூழல் மிகவும் காணத் தகுந்தது. மழைக்காலங்களில் கங்கை நதியைப் போல ஆக்ரோஷத்துடன் இருக்கும் இந்த நதியின் சிறந்த காட்சியை காண முடியும். கண்கவரும் நிலப்பகுதிகளை அழகிய பின்னணியாக கொண்டிருப்பதால் புகைப்படம் எடுப்பவர்களின் கனவு தேசமாக மகாநதி உள்ளது.



Click it and Unblock the Notifications