Search
  • Follow NativePlanet
Share

சானாசார் - சிலிர்க்கவைக்கும் சாகச அனுபவம்!

10

சானா மற்றும் சார் என்ற இரண்டு கிராமங்கள், சானாசார் என ஒரே பெயரில் வழங்கப்படுகின்றன. மேலும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலேயே இயற்கைக் காட்சிகள் நிறைந்த மிக அழகிய இடமாகவும் இக்கிராமங்கள் கருதப்படுகின்றன. கோப்பை வடிவ புல்வெளியான இப்பகுதி பட்னிடொப் பகுதியில் இருந்து 20கிமீ தொலைவில் உள்ள சானா மற்றும் சார் என்ற இரண்டு சிறிய ஏரிகளின் பெயரால் வழங்கப்படுகிறது.

'குட்டி குல்மார்க்' என வழங்கப்படும் சானாசார் பகுதி கடல் மட்டத்தில் இருந்து 2079மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு அமைந்திருக்கும் சமவெளி மற்றும் குன்றுப் பகுதிகள் சறுக்கு விளையாட்டு, குதிரை சவாரி, பலூன் சவாரி, மலையேற்றம், பாறையேற்றம், கூடாரம் அமைத்து தங்குதல் போன்ற விளையாட்டுகளுக்கும், பொழுதுபோக்குகளுக்கும் நன்றாகப் பயன்படுகின்றது.

இங்கு விளையாடப்படும் அனைத்து சாகச விளையாட்டுக்களையும் ஜம்மு காஷ்மீர் சுற்றுலாத் துறை அதிகாரிகளே ஏற்பாடு செய்து தருகிறார்கள்.  

மலையேற்றத்தில் விருப்பமுள்ள பயணிகள் அதற்கான கருவிகளை சுற்றுலாத்துறை ஏற்படுத்தியிருக்கும் கடைகளிலேயே காப்புத்தொகை செலுத்தி வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம். சாகச விளையாட்டுகள் மட்டுமல்லாது சுற்றிப்பார்க்கவும் இங்கு பல இடங்கள் உள்ளது.

நாக் ஷாங்க் பல் என்ற கடவுளை மூலதெய்வமாகக் கொண்ட ஷாங்க் பல் கோவில் இங்கு அமைந்திருக்கிறது. மேலும் லடூ லடி, ஷாந்தா கலா, சுர்னி குந்த் ஆகியவை சானாசாரில் இருக்கும் புகழ்பெற்ற மலையேற்றப் பாதைகள் ஆகும்.  

சானாசாரில் சமீபத்தில் சுற்றுலாத்துறையால் உருவாக்கப்பட்டிருக்கும் 9-பந்துக்குழிகள் கொண்ட கோல்ஃப் மைதானத்தில் பயணிகள் நேரம் செலவிடலாம். மேலும் நேரமிருப்பின் சானாசாருக்கு அருகே உள்ள நாக் கோவில், நீர்வீழ்ச்சி மற்றும் மறைவோடை ஆகியவற்றை கண்டுகளிக்கலாம்.

சானாசார் பகுதியை பேருந்து, ரயில் மற்றும் விமான பயணத்தின் மூலமும் அடையலாம். குதிரைசவாரி, பலூன் சவாரி, பாராக்ளைடிங் ஆகிய விளையாட்டுக்களை கோடைகாலத்தில் மட்டுமே இங்கு விளையாட முடியும் என்பதால் மார்ச் முதல் மே மாதம் வரை இங்கு பயணம் செய்வதே சிறந்ததாகக் கருதப்படுகிறது.

சானாசார் சிறப்பு

சானாசார் வானிலை

சிறந்த காலநிலை சானாசார்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது சானாசார்

  • சாலை வழியாக
    சான்சாருக்கு சாலைப் போக்குவரத்து உண்டு என்றாலும் முக்கிய நகரங்களான டெல்லி, லூதியான, மனாலி, சிம்லா ஆகிய ஊர்களில் இருந்து இங்கு நேரடி பேருந்து வசதி இல்லை. ஆனால் மேற்கண்ட ஊர்களில் இருந்து ஜம்முவுக்குப் பயணம் செய்து பின் அங்கிருந்து சானாசாரை அடையலாம்.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    சான்சாருக்கு அருகாமையில் இருக்கும் பெரிய ரயில்நிலையம் ஜம்முவில் இருக்கும் தவி ரயில்நிலையம் ஆகும். சென்னை, புதுடில்லி, ஹவுராஹ், மும்பை ஆகிய முக்கிய நகரங்களில் இருந்து இங்கு ரயில்போக்குவரத்து உண்டு. இங்கிருந்து சான்சார் செல்ல பேருந்து வசதிகளும், தனியார் கார் வசதிகளும் உள்ளது.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    ஜம்முவில் இருக்கும் சட்வாரி விமானநிலையமே சானாசாருக்கு அருகில் இருக்கும் விமான நிலையமாகும். இந்தியாவின் முக்கிய நகரங்களான டெல்லி, கோவா, மும்பை, சண்டிகர், ஜெய்ப்பூர், லெஹ், ஸ்ரீநகர் ஆகிய நகரங்களுக்கு இங்கிருந்து விமான சேவைகள் உண்டு. ஜம்மு விமானநிலையத்திற்கு சான்சாரில் இருந்து பேருந்துகளும், தனியார் வாகன வசதிகளும் உண்டு.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
10 Mar,Tue
Check Out
11 Mar,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed