பனாசர் தோட்டம், 12 கதவுகளை கொண்ட கட்டடமான பரடாரியில் உள்ள குளத்துக்கு நடுவில் உள்ளது. இரவு நேரத்தில் நிலா வெளிச்சம் இந்த குளத்தில் விழும் போது இந்த இடம் பேரழகாக காட்சி அளிக்கும்.
இந்த இடம் முன்னாட்களில் ஜிந்த் மாநிலத்தை ஆண்டவர்கள் கோடைக்காலத்தின் போது பயன்படுத்தியதாகும். இப்போது நுழைவு கட்டணம் ஏதும் இல்லாமல் வாரம் முழுவதும் சுற்றுலாப் பயணிகள் சுற்றிப் பார்க்க அனுமதிக்கப்படுகிறது.
இந்த தோட்டத்தில் உள்ள அரண்மனை தற்போது அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது. இங்கே பழங்காலத்து ஆயுதங்களும் பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.



Click it and Unblock the Notifications