விஜய் மந்திர் பேலஸ் எனும் இந்த அரண்மனை ராஜஸ்தான் மாநிலத்தில் அல்வர் நகரத்திலிருந்து10 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இது ஜெய் சிங் மஹாராஜாவால் 1918ம் ஆண்டு கட்டப்பட்டு ராஜகுடும்ப வசிப்பிடமாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
அற்புதமான கட்டிடக்கலை அம்சங்களுக்காக புகழ்பெற்றுள்ள இந்த அரண்மனை 106 அறைகளையும் ஒரு அழகிய நந்தவனத்தையும் கொண்டுள்ளது. விஜய் சாகர் ஏரியின் கரையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த அரண்மனை மஹாராஜா ஜெய் சிங் அவர்களாலேயே வடிவமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications