ராஜா முகுந்த் சிங் என்பவரால் 18ம் நூற்றாண்டில் நிர்மாணிக்கப்பட்ட இந்த முகுந்த்கர் நகரம் தற்சமயம் ஜுஞ்ஜுனு மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள பல அழகிய ஹவேலிகள் அவற்றின் திவான் கானா மற்றும் சுவரோவியங்களுக்காக பிரசித்தமாக அறியப்படுகின்றன.
இந்த திவான் கானா கூடங்களில் சுவர் அலங்கார தொங்கிகள், குடும்ப படங்கள் மற்றும் மர இருக்கைச்சாமான்கள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. 17ம் நூற்றாண்டு மற்றும் 18ம் நூற்றாண்டைச்சேர்ந்த இவை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதப்படுகின்றன. இங்குள்ள வண்ணம் பூசப்பட்ட குடும்ப சாத்ரி மாடங்களும் பார்த்து ரசிக்கும் வகையில் காணப்படுகின்றன.
கிருஷ்ண பஹவானுக்காக உருவாக்கப்பட்டுள்ள வேணுகோபால் மந்திர் மற்றும் கோபிநாத் கோயில் ஆகியவற்றை இங்கு தரிசிக்கலாம். ஃபோர்ட் வில்லியம் ஹவேலி, குவாலே வோலோன் கி ஹவேலி, கங்கா பக்ஸ் சரஃப் ஹவேலி மற்றும் ராஜ் குமார் கனேரிவாலா கலாகேந்த்ரா போன்ற இதர முக்கியமான அம்சங்களும் பயணிகளுக்காக இந்நகரில் காத்திருக்கின்றன.



Click it and Unblock the Notifications