வட இந்தியாவின் இரண்டாவது பழமையான தேவாலயமாக சிம்லாவின் கிறிஸ்ட் சர்ச் விளங்குவது குறிப்பிடத்தக்கது. இது 1846-1857 வரையிலான கால கட்டத்தில் கட்டப்பட்டது.
ரிட்ஜிலிருந்து இந்த தேவாலயத்தைப்பார்க்கும் போது பித்தளையில் பெயர்கள் பொறிக்கப்பட்ட மற்றும் நிறமேற்றப்பட்ட கண்ணாடி சன்னல்கள் அலங்கரிக்கப்பட்ட ஒரு அழகான தேவாலயமாகத் தெரிகிறது.
இந்த தேவாலயம் கர்னல் ஜே.டி.பொய்லியு அவர்களால் வடிவமைக்கப்பட்டது. 1860 ல் இந்த தேவாலயத்தின் கோபுரத்தில் ஒரு கடிகாரம் பொருத்தப்பட்டது. பிரபல எழுத்தாளர் ருட்யார்ட் கிப்ளிங்கின் தந்தை லாக்வுட் கிப்ளிங் அவர்களால் இந்தக்கோவிலின் சாளரத்தைச்சுற்றி அமைக்கப்பட்ட சுவரோவியம் வடிவமைக்கப்பட்டது.
இந்தக் கோவில் பிரிட்டிஷ் காலனித்துவ கால கட்டங்களில் பிரிட்டிஷ் அதிகாரிகள் மற்றும் மேதைகளின் ப்ரார்த்தனைக்கூடமாக பயன்படுத்தப்பட்டது.
செயின்ட் மைக்கேல் தேவாலயம் இந்த மலைவாழிடத்தில் முதல் ரோமன் கத்தோலிக்க தேவாலயமாக இருந்தது. இது 1886 ல் பிரெஞ்சு-கோதிக் கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டது. இந்த கட்டிடத்தின் சீரிய கல் வேலைப்பாடுகளும், அழகிய நிறமேற்றப்பெற்ற கண்ணாடி சன்னல்களும் கண்கொள்ளாக்காட்சியாக அமைந்துள்ளது.



Click it and Unblock the Notifications