குர்க்கா கேட், சிம்லா

சிம்லாவின் பழமையான நுழை வாயில்களில் ஒன்று குர்க்கா கேட் ஆகும். சௌரா மைதான் ரோட்டில் அமைந்துள்ள இது வைஸ் ரீகல் லாட்ஜ் செல்ல உதவும் நுழை வாயிலாகும்.

இந்த லாட்ஜ் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. பிரிட்டிஷ் ஆட்சியின் போது இந்திய ராஜப்பிரதிநிதியின் (Viceroy of India) குடியிருப்பாக இருந்த இது தற்போது 'இந்திய உயர் கல்வி நிலையமாக' (Indian Institute of Advanced Study) இயங்கி வருகிறது.

துணிவு மற்றும் பிரிட்டிஷ் பேரரசிற்கு காட்டிய விசுவாசம் ஆகியவற்றிற்கு பெயர் போன குர்க்காசின் நினைவிற்கு காணிக்கையாக இந்த நுழைவாயில் கட்டப்பட்டது. கல் அமைப்பிலான இந்த கட்டிடம் பார்வையாளர்களுக்கு ஒரு சுவாரசியமான காட்சியை அளிக்கிறது.

Please Wait while comments are loading...