இமாலயப் பறவைகள் சரணாலயம் ஒரு அழகிய பூங்காவாகும். இங்கே அரிய வகை பறவையினங்களை பெருமளவில் காண முடியும். இந்த சரணாலயம் இமாலயப் பறவைகள் பூங்கா என்றும் அழைக்கப்படுகிறது.
சிம்லாவின் இந்த புகழ் பெற்ற இடம் 2213 மீட்டர் உயரத்தில் அரசுப்பிரதிநிதி மாளிகைக்கு (Viceregal Lodge) மிக அருகில் அமைந்துள்ளது. இங்கு மயில் போன்ற ஒரு வகை கோழி இனத்தையும் (pheasants), மோனல்(monal) என்ற பறவையினத்தையும், பல்வேறு அரிதான மற்றும் அழிந்து கொண்டிருக்கும் உயிரினங்களையும் காணலாம்.
ஸ்காண்டல் பாயிண்டிலிருந்து 4.5 கிலோமீட்டர் நடைப்பயண தூரத்தில் இந்த அழகான பூங்கா உள்ளது.இந்த சரணாலயம் கோடை காலத்தில் மட்டுமே திறந்திருக்கும் ஏனெனில் குளிர் காலத்தில் இங்கு கடுமையான பனிப்பொழிவு ஏற்படுகிறது.



Click it and Unblock the Notifications