1845 ஆம் ஆண்டு கட்டப்பட்ட காளி பாரி கோவில் மாலுக்கு அருகில் அமைந்துள்ளது. இந்தக்கோவில் பெண் தெய்வமான சியாமளா தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது மேலும் 'சிம்லா' என்ற பெயர் அதனால் உருவானது.
இந்தப்பெண் தெய்வம் காளியின் மறு அவதாரமாக நம்பப்படுகிறது. இக்கோவிலில் பெண் தெய்வத்தின் மரத்தாலான வடிவம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்துப்பண்டிகைகளான தீபாவளி, நவராத்திரி மற்றும் துர்கா பூஜையின் போது இத்தலத்தை காண பல பக்தர்கள் வருகை புரிகின்றனர்.



Click it and Unblock the Notifications