இமாச்சல பிரதேசத்தில், படகு சவாரி அதிக அளவில் சுற்றுலா பயணிகளை கவர்கிறது, ஏனெனில் அங்கு நான்கு நதிகள் உள்ளன. அவற்றில் ஒயிட் வாட்டர் ராஃப்டிங் எனப்படும் படகுப்பயணத்தை அனுபவிக்கலாம்.
பியாஸ், ராவி, செனாப் மற்றும் ஜீலம் ஆகியன அந்நதிகளின் பெயர்களாகும். இந்த நதிகள் வடமேற்கு திசையில் கிட்டத்தட்ட ஒன்றுக்கொன்று இணையாகச் செல்கிறது.
படகு சவாரி ஆர்வலர்களுக்கு அனைத்து நதிகளும் அற்புதமாக விரிந்து காணப்பட்டாலும், குறிப்பாக பியாஸ் நதியில் படகு சவாரி செய்வது பெரும் புகழ்பெற்றதாக விளங்குகிறது.
கோடை காலம், இலையுதிர் காலம் மற்றும் வசந்த காலம் இந்த விளையாட்டை விளையாட சிறந்த காலமாக இருக்கிறது. ஏனெனில் குளிர் காலத்தில் கடுமையான பனிப்பொழிவாலும், மழைக்காலத்தில் மழையாலும் இவ்விளையாட்டு இக்காலங்களில் அனுமதிக்கப்படுவதில்லை.



Click it and Unblock the Notifications