மால் சிம்லாவின் புகழ்பெற்ற ஷாப்பிங் பகுதியாகும். இந்த பகுதி ஓபராய் கிளார்க் ஓட்டலிருந்து ஸ்காண்டல் பாயிண்ட் வரை விரிந்து காணப்படுகிறது. இங்கே உணவகங்கள், வங்கிகள், க்ளப் மற்றும் சுற்றுலா மையங்கள் பல உள்ளன. வரலாற்று சிறப்புமிக்க கடைகள், கஃபேக்கள் மற்றும் உணவகங்கள் இப்பகுதியின் முக்கிய கவருமிடங்களாகும்.
கூடுதலாக சமூகம் மற்றும் கலாச்சார தொடர்புடைய நிகழ்சிகள் இங்கு நடத்தப்படுகிறது. சிம்லாவின் சமூக வாழ்க்கையைக்காட்டும் மையமாக இந்த பகுதி கருதப்படுகிறது. இங்குள்ள உணவகங்கள் பல்வேறு வகையான சுவையான உணவு வகைகளை நியாயமான விலையில் வழங்குகின்றன.



Click it and Unblock the Notifications