Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள்» ஷிவனசமுத்ரா

ஷிவனசமுத்ரா - காவிரி ஆற்றின் இரட்டை நீர்வீழ்ச்சி

17

ஷிவனசமுத்ரம் அல்லது ஷிவசமுத்ரம் கர்நாடகா மாநிலத்தில் மாண்டியா மாவட்டத்தில் உள்ள ஒரு சுற்றுலாத் தலம் ஆகும். ஷிவசமுத்ரம் என்பதற்கு ‘ சிவனுடைய சமுத்திரம்’ என்பது பொருளாகும். இது காவிரி ஆற்றில் உள்ள புராதனமான தீவு நகரமாகும்.

தீவு, நீர்வீழ்ச்சி மற்றும் உற்சாகம்

ஷிவனசமுத்ரம் இங்குள்ள நீர்வீழ்ச்சிக்காக முக்கியமான சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக பெயர்பெற்றுள்ளது. உலகில் 100 முக்கியமான நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாக இது அறியப்பட்டுள்ளது.

தக்காணப் பீடபூமியின் பாறைப்படுகைகள் மற்றும் பள்ளத்தாக்குகள் வழியே ஓடிவரும் காவிரி ஆறு இங்கு ‘ககனசுக்கி’ மற்றும் ‘பரச்சுக்கி’ எனும் எனும் இரண்டு கிளைகளாக பிரிகிறது. இப்படி பிரியும் காவிரி ஆற்றின் இந்த இரண்டு கிளைகளும் வேகத்துடன் ஒரு பெரிய சிகரத்திலிருந்து 98 மீட்டர் உயரத்திலிருந்து நீர்வீழ்ச்சியாய் சரிகின்றன.

ககனசுக்கி ஆற்றின் வீழ்ச்சி மலையின் மேற்குப்பகுதியிலும் பரச்சுக்கி ஆற்றின் நீர்வீழ்ச்சி கிழக்குப்பகுதியிலும் வீழ்கின்றன. ககனசுக்கி நீர்வீழ்ச்சியின் அழகை ஷிவனசமுத்ர காட்சிக் கோபுரத்திலிருந்து பார்து மகிழலாம். இது ஹஸ்ரத் மர்தானே கைப் தர்க்காவுக்கு அருகில் உள்ளது.

பரச்சுக்கி ஆற்றின் நீர்வீழ்ச்சி ககனசுக்கி நீர்வீழ்ச்சியிலிருந்து 1 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இது வேகமான சுழல்களையும் ஆழமான பாறைப்பிளவுகளையும் கொண்டுள்ளது.

தொன்மையான கோயில்களைக்கொண்ட இந்த புராதன ஷிவசமுத்திர நகரத்தில் ஆசியாவிலேயே முதன்முதலில் அமைக்கப்பட்ட நீர்மின் உற்பத்தி நிலையமும் அமைந்துள்ளது. இது கோலார் தங்கச்சுரங்கத்துக்கான மின்சாரத் தேவையை நிறைவேற்றுவதற்காக உருவாக்கப்பட்டது.

ஷிவனசமுத்ரா பெங்களூர் போன்ற முக்கிய நகரங்களுடன் நல்ல சாலை வசதிகளால் இணைக்கப்பட்டுள்ளது. ஜுலை முதல் அக்டோபர் வரையிலான காலம் இங்கு விஜயம் செய்ய உகந்த காலமாகும்.

ஷிவனசமுத்ரா சிறப்பு

ஷிவனசமுத்ரா வானிலை

சிறந்த காலநிலை ஷிவனசமுத்ரா

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது ஷிவனசமுத்ரா

  • சாலை வழியாக
    ஷிவனசமுத்திரம் நீர்வீழ்ச்சி ஸ்தலத்துக்கு 15கி.மீ தொலைவில் அமைந்துள்ள கொள்ளேகால் பகுதி வரையிலும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அங்கிருந்து பயணிகள் ஆட்டொ மற்றும் டாக்சிகளில் நீர்வீழ்ச்சிப்பகுதிக்கு செல்லலாம். கர்நாடக அரசுப்பேருந்துகளும், தனியார் சுற்றுலா பேருந்துகளும் அதிக அளவில் பெங்களூர், மைசூர் மற்றும் இதர அருகாமை நகரங்களிலிருந்து கொள்ளேகாலுக்கு இயக்கபடுகின்றன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    மைசூர் ரயில் நிலையமே ஷிவனசமுத்திரத்துக்கு அருகிலுள்ள ரயில் நிலையமாக 77 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இங்கிருந்து இந்தியாவின் பல முக்கிய நகரங்களுக்கு ரயில் சேவைகள் உள்ளன. பயணிகள் இந்த ரயில் நிலையத்திலிருந்து பேருந்து மற்றும் டாக்சிகள் மூலம் நீர்வீழ்ச்சிக்கு செல்லலாம்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    பெங்களூர் விமான நிலையம் ஷிவசமுத்திரத்திலிருந்து 170 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இது எல்ல முக்கிய இந்திய நகரங்கள் மற்றும் வெளிநாட்டு நகரங்களுக்கு அதிக அளவில் விமான சேவைகளைக்கொண்டுள்ளது.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
25 Apr,Sat
Return On
26 Apr,Sun
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
25 Apr,Sat
Check Out
26 Apr,Sun
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
25 Apr,Sat
Return On
26 Apr,Sun