Search
  • Follow NativePlanet
Share

சிவகிரி - இயற்கை வடித்த சிற்பம்

10

சிக்மகளூர் மாவட்டத்தில் உள்ள சிவகிரியின் இருண்ட அடர் வனங்கள், எம்மிதொட்டி கிராமத்துக்கு அருகில் ஹொக்கரிகங்க்ரி குன்றின் சரிவுகளை மறைத்துக்கொண்டு இயற்கை காதலர்களின் வருகைக்காக காத்துக் கொண்டிருக்கிறது.

சிவகிரி தன்னுடைய அழகிய காடுகளை போலவே விஸ்தாரமாக பரந்து விரிந்து கிடக்கும் காப்பித் தோட்டத்துக்காகவும் புகழ் பெற்றது. இந்த நூறு வருட பழமை வாய்ந்த காப்பித் தோட்டம் புலிகள் பாதுகாப்பு காடுகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது. இதன் காரணமாக காப்பித் தோட்டத்தை சுற்றி புலிகள் சாதாரணமாக நடமாடுவதை பயணிகள் பார்க்கலாம்.

சிவகிரியின் கவர்ச்சிக்கு மற்றுமொரு காரணம் தொட்டபல்லே சித்தரகுத்தா குன்று. இது கடல் மட்டத்திலிருந்து 5500 அடி உயரத்தில் அமைந்திருப்பதால் பாபா புதன் கிரி குன்று, பத்ரா ஏரி, எம்மிதொட்டி கிராமம் போன்றவற்றின் அழகை குன்றின் உச்சியிலிருந்து பரிபூரணமாக ரசிக்கலாம்.

அதுமட்டுமல்லாமல் இந்தக் குன்றின் பாறைகளில் ஏறிச் செல்வது சுவாரஸ்யமான அனுபவமாக இருக்கும். ஆனால் பாறைகளில் ஏறிச் செல்லும் போது நீங்கள் விலங்குகளின் காலடிச் சுவடுகளை பார்க்கலாம். ஆதலால் பயணிகள், வழிகாட்டி ஒருவரை உடன் அழைத்துச் செல்வது நல்லது.

சிவகிரியின் காடுகளை மழைக் காலங்களில் சுற்றிப் பார்ப்பது சற்று கடினமான காரியம். ஆனால் மற்ற காலங்களில் சிவகிரியின் பாறைகளில் ஏறிச் செல்வதோ, நடைபயணம் செல்வதோ மகிழ்வூட்டும் பொழுதுபோக்குகளாகவே இருக்கும்.

சிவகிரி பெங்களூரிலிருந்து 235 கிலோமீட்டர் தொலைவிலும், அதன் அருகாமை ரயில் நிலையம் உள்ள ஹூப்ளியிலிருந்து 215 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்திருக்கிறது.

சிவகிரி சிறப்பு

சிவகிரி வானிலை

சிறந்த காலநிலை சிவகிரி

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது சிவகிரி

  • சாலை வழியாக
    பெங்களூர், ஹூப்ளி, மங்களூர் போன்ற நகரங்களிலிருந்து சிவகிரிக்கு எண்ணற்ற அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆகையால் சாலை மூலமாகவும் பயணிகள் சிவகிரியை சுலபமாக அடையலாம்.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    சிவகிரிக்கு அருகில் உள்ள ரயில் நிலையமாக ஹூப்ளி ரயில் நிலையம் அறியப்படுகிறது. இந்த ரயில் நிலையம் நாட்டின் அனைத்து நகரங்களுடனும் இணைக்கப்பட்டிருக்கிறது. எனவே பயணிகள் ஹூப்ளி வந்த பின்னர் வாடகை கார்களில் எந்த சிரமமுமின்றி சிவகிரியை அடையலாம்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    சிவகிரியிலிருந்து பெங்களூர் விமான நிலையம் 235 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. இதனால் உள்நாட்டு, மற்றும் வெளிநாட்டு பயணிகள் சுலபமாக சிவகிரியை அடையலாம்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
07 Sep,Mon
Check Out
08 Sep,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue