அசாமைப் பற்றியும், அஹோம் சாம்ராஜ்யத்தைப் பற்றியும் தெரிந்து கொள்ள மிகச் சிறந்த இடம் தாய் அஹோம் அருங்காட்சியகம். நகரின் மையப்பகுதியில், சிப்சாகர் நீர்தேக்கத் தொட்டியின் கிழக்குக் கரையில் அமைந்துள்ளது தாய் அஹோம் அருங்காட்சியம்.
இந்த அருங்காட்சியகம், அஹோம் சாம்ராஜ்ய மக்களின் தினசரி வாழ்க்கை முறையை பறைசாற்றும் வகையில் அமைந்திருக்கிறது. 1972 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட இந்த அருங்காட்சிகத்தில், அதிக அளவில் கலைப் பொருட்களும், ஆபரணங்களும் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.
13 ஆம் நூற்றாண்டிலிருந்து 18 ஆம் நூற்றாண்டு வரை ஆண்ட அஹோம் சாம்ராஜ்யத்தின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
இங்கு காணப்படும் கல்வெட்டுக்கள், உடைகள், இரும்பு மற்றும் மரத்தால் ஆன போர்க்கருவிகள், மூங்கில் பொருட்கள் போன்றவை சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் கவர்ந்து வருகிறது.
இந்தப் பொருட்களை ஒன்றிணைத்து அருங்காட்சிகம் அமைத்து, அதனை சரிவர பராமரித்து வரும் அசாம் மாநில அரசைப் பாராட்டியே ஆக வேண்டும். சிப்சாகர் நகருக்கு சுற்றுலா செல்பவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய இடம் தாய் அஹோம் அருங்காட்சியகம்.



Click it and Unblock the Notifications