மகாத்மா காந்தியின் பெயர் தாங்கிய காந்திபாக் பார்க் சில்சார் நகரத்தின் மையத்தில் அமைந்துள்ளது. இந்த அழகிய கண்ணை கவரும் பசுமையான பெரிய பூங்கா வளர்ந்து வரும் இந்த நகரத்தின் மையத்தில் அமைந்துள்ளது.
கண்காட்சிகள் மற்றும் சந்தைகள் அல்லது உணவுக் கண்காட்சி போன்றவை இந்த காந்திபாக் பூங்காவில் அடிக்கடி நடைபெறுகிறது. இங்கு வருடாவருடம் நடைபெறும் காந்திமேளா மிகப் பிரபலமான மிக முக்கியமான நிகழ்ச்சியாகும்.
அந்த மேளாவில் கைவினை கலைஞர்களின் கைவினைப் பொருட்கள் மற்றும் கைத்தறி ஆடைகள் முக்கிய இடம் பெறுகின்றன. இந்த மேளா ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் நடைபெறுகிறது.
பூங்காவின் ஒரு மூலையில் தியாகிகளை நினைவு கூறும் வகையிலே கட்டப்பட்ட தியாகிகள் கல்லறை உள்ளது. இது 1961ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21 ம் தேதி போலீஸால் சுட்டு வீழ்த்தப்பட்ட 11 மொழிப்போர் தியாகிகள் நினைவாக கட்டப்படுள்ளது.
அவர்கள் பாரக் பள்ளத்தாக்கில் அஸ்ஸாமி மொழியை கட்டாயமாக அமுல் படுத்திய மாநில அரசை எதிர்த்து போராடினார்கள். ஏனெனில் பாரக் பள்ளத்தாக்கில் பெங்காலிகள் பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்றனர்.



Click it and Unblock the Notifications