ஜதிங்கா கிராமம் சில்சார் நகரத்தில் இருந்து சுமார் 80 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இங்கு வழங்கப்படும் நாட்டுப்புற கதைகளின் படி இந்த கிராமத்தில் பறைவைகள் தற்கொலை செய்து கொல்வதாக நம்பப்படுகிறது.
எனவே இந்த கிராமம் சுற்றுலா பயணிகள் மத்தியில் புகழ் பெற்று விளங்குகிறது. அறிவியல் ஆய்வுகள், பறவைகள் உண்மையில் தற்கொலை செய்து கொள்வதில்லை, ஆனால் கொலை செய்யப்படுகின்றன என நீருபித்துள்ளன.
இலையுதிர் மாதத்தில் வரும் அமாவாசை இரவுகளில், இந்தப் பள்ளத்தாக்கில் பறக்கும் பறவைகள் தங்களது இலக்கிலிருந்து தவறி விடுவதாக கூறப்படுகிறது. இங்குள்ள உள்ளூர் மக்கள் விளக்குகள் வெளிச்சத்தில் இந்த பறவைகளை ஈர்த்து மூங்கில் கம்புகள் கொண்டு அவைகளை கொன்று சாப்பிடுகின்றனர்.
எது எவ்வாறாயினும் இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. மேலும் ஜதிங்கா அசாமில் உள்ள மிகச் சிறந்த மலைவாசஸ்தலமாக கருதப்படுகிறது.
ஜதிங்கா ஒரு அழகிய மலைவாசஸ்தலம் ஆகும். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் இயற்கை அன்னையின் மடியில் தவழ்ந்து மகிழலாம். இங்குள்ள அடர்ந்த பசுமை, மற்றும் தெளிந்த நீரோடைகள் உங்களுடைய சுற்றுலாவை சிறந்ததாக மாற்ற உத்திரவாதம் அளிக்கின்றன.
நீங்கள் இந்த இடத்திற்கு பயணம் மேற்கொள்ளும் போது உள்ளூர் கலைகள் மற்றும் தொல்பொருள்கள் கடைக்கு சென்று உங்கள் மனதிற்கு பிடித்ததை வாங்கி மகிழலாம்.



Click it and Unblock the Notifications