Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சில்வாஸா » ஈர்க்கும் இடங்கள் » தாத்ரா பூங்கா

தாத்ரா பூங்கா, சில்வாஸா

22

ஐலேண்ட் கார்டன் தாத்ரா என்றும் அழைக்கப்படும் இந்த தாத்ரா பூங்கா சில்வாசாவிலிருந்து சுமார் 5 கி.மீ தூரத்தில் தாத்ரா &  நகர் ஹவேலி யூனியன் பிரதேசத்தின் நுழைவாயிற்பகுதியிலேயே அமைந்திருக்கிறது.

அற்புதமான இந்த பசுமைப்பூங்கா ஒரு அழகிய ஏரி, ஜப்பானிய பாணியில் அமைக்கப்பட்ட மரப்பாலங்கள், துடுப்புப்படகுகள், குடிசை வீடுகள் மற்றும் நடைபாதைகள் போன்றவற்றை கொண்டிருக்கிறது.

சுமார் 8 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பூங்காவில் சுவையான உணவுவகைகளைப்பரிமாறும் உணவகங்களும் உள்ளன.

இந்த பூங்காவிற்கு வருகை தரும் பார்வையாளர்கள் ஏற்கனவே பரிச்சயமான இடத்தை பார்ப்பது போல் உணர்கின்றனர். இதற்கு காரணம் பெரும்பாலான பாலிவுட் சினிமாக்களில் இந்த பூங்கா இடம்பெற்றிருப்பதேயாகும். பல பிரபலமான சினிமாப்பாடல் காட்சிகள் இங்கு படப்பிடிப்பு செய்யப்பட்டிருக்கின்றன.

சுற்றுலாப்பயணிகள் இந்த பூங்காவிலுள்ள ஏரியில் துடுப்புப்படகு சவாரி செய்யலாம். பலவிதமான மலர்ச்செடிகளை ரசித்தப்படி பசுமையான சூழலில் படகுச்சவாரி செய்யும் அனுபவம் வெகுவாக பயணிகளால் ரசிக்கப்படுகிறது.

ஒவ்வொரு வருடமும் சுமார் நான்கு லட்சம் சுற்றுலாப்பயணிகள் இந்த பூங்காவுக்கு வருகை தருவதாக ஒரு கணக்கீடு கூறுகிறது. இந்த பூங்காவிற்குள் செல்ல நுழைவுக்கட்டணம் உண்டு.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
31 Mar,Tue
Check Out
01 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed