அழகு என்ற பொருளைத்தரும் ‘சில்வா’எனும் சொல்லை தன் பெயரிலேயே கொண்டுள்ள சில்வாஸா நகரத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் இந்த லுஹரி எனும் இடம் அமைந்திருக்கிறது. சில்வாசாவிலிருந்து சுமார் 14 கி.மீ தூரத்தில் முக்கிய சுற்றுலாத்தலமான லுஹரி அமைந்துள்ளது.
அலுப்பூட்டும் நகர வாழ்க்கையினால் சோர்ந்து போயிருப்பவர்களை புத்துணர்ச்சியூட்டும் எழில் அம்சங்களுடன் இந்த லுஹரி காட்சியளிக்கிறது. இரண்டு அல்லது மூன்று நாள் விடுமுறையை கழித்தபிறகு புதிய உற்சாகத்துடன் நீங்கள் ஊர் திரும்புவது நிச்சயம்.
இங்கு பல்வகையான தங்கும் விடுதிகள் அமைந்துள்ளது. மச்சான் எனப்படும் மரவீடுகள் இங்கே வெகு பிரசித்தம். இவை யாவுமே வனப்பகுதிகளுக்கு வெகு அருகில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மாநில சுற்றுலாத்துறை பல்வேறு சாகச பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மற்றும் மலையேற்ற பயணங்களை சுற்றுலாப்பயணிகளுக்காக ஏற்பாடு செய்து தருகிறது. சில்வாஸாவை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் கூடாரத்தங்கலுக்கான வசதிகளையும் இது பயணிகளுக்கு அளிக்கின்றது.



Click it and Unblock the Notifications