சிர்சியிலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உஞ்ச்சலி அருவி எனும் அழகிய அருவி அமைந்துள்ளது. இது 1845-ஆம் ஆண்டு மாவட்ட ஆட்சியர் ஜே.டி.லஷிங்க்டனால் கண்டுபிடிக்கப்பட்டதால் லஷிங்க்டன் அருவி என்றும் அழைக்கப்படுகிறது.
'கெப்பா ஜாக்' என்ற சிறப்புப் பெயரும் இந்த அருவிக்கு உண்டு. கெப்பா ஜாக் என்றால் காதை செவிடாக்கும் ஒலி எழுப்பும் அருவி என்று பொருள். சுற்றுலாப் பயணிகள் ஆண்டின் எந்த பருவத்தில் வந்தாலும் உஞ்ச்சலி அருவியின் பேரழகை கண்டுகளிக்கலாம்.



Click it and Unblock the Notifications