Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சிர்சி » ஈர்க்கும் இடங்கள் » மாரிகம்பா கோயில்

மாரிகம்பா கோயில், சிர்சி

11

கர்நாடகாவின் உத்தர கன்னடா மாவட்டத்தில் அமைந்திருக்கும் சிர்சி நகரின் புகழுக்கு முக்கிய காரணமாக விளங்கி வருவது 17-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மாரிகம்பா கோயிலே ஆகும். இந்த கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள 7 அடி உயர மாரிகம்பாவின் விக்ரகத்தை தரிசிப்பதற்காகவே இங்கு பக்தர்கள் கூட்டம் அலை மோதும்.

 

கி.பி.1611-இல் நகரத்துக்கு வெளியே ஒரு குளத்தில் கண்டெடுக்கப்பட்ட மாரிகம்பாவின் சிலைக்கு சதாசிவ ராவ் இரண்டாம் மன்னர் அதே ஆண்டில் கோயில் எடுப்பித்தார். கர்நாடகாவில் உள்ள மாரிகம்பாவின் சிலைகளிலேயே மிகவும் பெரியதாக இந்த கோயிலின் சிலை கருதப்படுகிறது.

மாரிகம்பாவின் சிலையை தவிர கோயில் சுவர்களில் காணப்படும் கவி ஓவியங்களையும் பயணிகள் கண்டு ரசிக்கலாம். இந்தக் கோயிலில் மாரிகம்பா ஜாத்ரே என்ற பெயரில் ஆண்டுதோறும் நடத்தப்படும் திருவிழாவில் பல்வேறு பகுதிகளிலிருந்து, அனைத்து மதத்தினவரும் பாரபட்சமின்றி கலந்து கொண்டு கடவுளை தரிசிப்பர்.

அதுமட்டுமல்லாமல் இப்பகுதிகளில் இயற்கை சீற்றங்கள் ஏதும் நிகழாமல் இருப்பதற்கு மாரிகம்பாவின் அருளே காரணம் என்று அப்பகுதி மக்கள் நம்பி வருகின்றனர்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
11 Jul,Sat
Return On
12 Jul,Sun
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
11 Jul,Sat
Check Out
12 Jul,Sun
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
11 Jul,Sat
Return On
12 Jul,Sun