ஸ்ரீ நகருக்கு அருகில் இருக்கும் 'ஷிப்யான்' காஷ்மீர் மாநிலத்தின் 'ஆப்பிள் கிண்ணம்' என்று புகழ் பெற்று விளங்கும் இடமாகும். இந்த இடத்தில் உற்பத்தியாகும் ஆப்பிள்கள் இந்தியா முழுவதும் உள்ள பழச் சந்தைகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.
மிகவும் பழமையான நகரமான இது, பழைய காலனீய சாலை என்று அழைக்கப்படும் முகலாய சாலையில் அமைந்திருப்பதால் வரலாற்று முக்கியத்துவம் பெற்ற இடமாகவும் உள்ளது.
இந்த சாலை பாகிஸ்தானிலுள்ள இலாகூரை, ஸ்ரீ நகருடன் நேரடியாக இணைக்கும் சாலையாகும். மேலும், 1872-1892-ம் ஆண்டுகளில் காஷ்மீரின் வாஸரத் தலைமையிடங்களில் ஒன்றாகவும் ஷிப்யான் இருந்திருக்கிறது.
ஜாமா மசூதி, கோவ்செர்நாக், அஹர்பல் நீர்வீழ்ச்சி, குங்வாடன், நாகி ராய் நாக், ரம்பி ஆரா மற்றும் லாவாஹின்தோரா ஷஹ்லாடூ ஆகியவை இந்த இடத்திலுள்ள பிற சுற்றுலா தலங்களாகும். தோபிஜானில் உள்ள சல்பார் ஊற்றும், அதன் மருத்துவ குணமுடைய நீரூக்காக சுற்றுலா பயணிகளிடம் மிகவும் புகழ் பெற்ற இடமாகும்.



Click it and Unblock the Notifications