சிருங்கேரியில் சுற்றுலாப்பயணிகள் தரிசிக்க வேண்டிய மற்றொன்று கெரே ஆஞ்சனேயர் ஆலயம். குரு ஆதிசங்கராச்சாரியாரால் நிர்மாணிக்கப்பட்ட ஒரே ஹனுமான் கோயில் இது என்பது இதன் விசேஷம்.
இந்த புனித ஸ்தலத்தை அடைய பக்தர்கள் 27 படிகளை ஏறிச்செல்லவேண்டும். மேலே பிரம்மாண்ட ஹனுமான் சிலையுடன் சிவபெருமானின் சிலையும் வினாயக் கடவுளின் சிலையும் தரிசிக்கக் கிடைக்கிறது. ஹனுமான் இடக்கையில் தாமரையுடன் வலக்கையால் பக்தர்களை ஆசிர்வாதிக்கும் நிலையில் காட்சியளிக்கின்றார்.அழகும் ஆன்மீக பிரகாசமும் மிளிரும் இந்த ஆலயம் பக்தர்கள் தியானம் செய்யவும் நீண்ட நேரம் அமர்ந்து ஹிருதய சுத்தி செய்து கொள்ளவும் ஏற்ற புனித ஸ்தலமாகும். கார்த்திகை கிருஷ்ண பட்ச மாத்த்தில் சனிக்கிழமை இந்த ஆலயத்தில் தீபோத்ஸவம் எனும் விழா கொண்டாடப்படுகிறது.



Click it and Unblock the Notifications