1784ம் ஆண்டு எழுப்பப்பட்டுள்ள இந்த அரண்மனை திப்பு சுல்தானின் கோடைக்கால அரன்மணையாக பிரசித்தமாக அறியப்படுகிறது. ஹைதர் அலியால் துவங்கப்பட்ட இதன் கட்டமைப்பு அவர் மகன் திப்பு சுல்தானால் முடிக்கப்பட்டது.
இந்த பிரதேசத்தில் முக்கிய சுற்றுலா ஸ்தலமாக புகழ் பெற்றுள்ள இந்த அரண்மனை1959 ம் ஆண்டு தேசிய நினைவு சின்னமாக அறிவிக்கப்பட்டது. ஸ்ரீரங்கப்பட்டணா வழியாக செல்லும் எல்லா சுற்றுலா பயணிகளும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒரு நினைவுச்சின்னம் இது.தரியா தௌலத் பாக் இந்தோ-சராசனிக் கட்டிடக்கலை பாணியில் அழகான நுணுக்கமான ஓவியங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
வண்ண ஓவியங்கள், வார்ப்பு ஓவியங்கள், கோட்டோவியங்கள் போன்ற பலவிதமான ஓவிய வடிவங்கள் மற்றும் திப்பு சுல்தான் பயன்படுத்திய அற்புதமான துணிவகைகள் போன்றவற்றை இந்த அரண்மனையின் முதல் தளத்தில் பயணிகள் பார்க்கலாம். தரைத்தளத்தில் ஆங்கிலேயருக்கு எதிரான போர் சம்பவங்கள் சுவர் ஓவியமாக தீட்டப்பட்டிருப்பதையும் பார்க்கலாம்.



Click it and Unblock the Notifications