டப்போலாவின் கவர்ச்சிக்கு முக்கிய காரணமாக விளங்குவது சிவசாகர் ஏரியே ஆகும். 90 கிலோமீட்டர் நீளம் பரந்து கிடக்கும் இந்த ஏரி, கொய்னா அணையின் நீர்தேக்கமாக இருந்து வருகிறது.
இந்த ஏரி நீர் விளையாட்டுகளில் ஆர்வமுள்ளவர்கள் கொண்டாடி திளைக்க எண்ணற்ற விளையாட்டுகளை கொண்டுள்ளது. அதிலும் எல்லையில்லா ஏரியில் நீந்திச் செல்வது, நீர் ஸ்கூட்டர் மற்றும் படகில் சவாரி செய்வது, கயாக் என்னும் சிறுபடகில் சவாரி செய்வது போன்ற நீர் விளையாட்டுகளில் ஈடுபடுவது ஆனந்த அனுபவமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications