Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » திருவல்லா » ஈர்க்கும் இடங்கள் » பளியக்கரா சர்ச்

பளியக்கரா சர்ச், திருவல்லா

11

சிரியன் கிறிஸ்துவ வகுப்பை சேர்ந்தவர்களுக்கான வழிபாட்டுத்தலமாக புகழ்பெற்றுள்ள இந்த தேவாலயம் ஸ்ரீ வல்லப கோயிலுக்கு அருகிலேயே அமைந்திருப்பது ஒரு வரலாற்று அதிசயமாகும்.

இந்த தேவாலயத்தின் வரலாற்று பின்னணியானது புனித தோமா கேரள பூமிக்கு வருகை செய்த காலமாக கருதப்படும் கி.பி 54 ம் ஆண்டு வரை பின்னோக்கி நீள்கிறது. தனித்தன்மையான இதன் கட்டிடக்கலை அம்சம் மற்றும் சிற்பங்களின் அழகு மிகப்பிரசித்தமாக அறியப்படுகிறது.

குறிப்பாக கிழக்குச் சுவர்ப்பகுதியில் காணப்படும் சுவரோவியங்கள் மற்றும் கலையம்சம் நிரம்பிய பீடம் போன்றவை பயணிகளால் மிகவும் ரசிக்கப்படுகின்றன. ஜாலி (ஜன்னல்) வேலைப்பாடுகள் மற்றும் சித்திர வடிப்புகள் கொண்ட சுவர் அமைப்பால் சூழப்பட்டிருக்கும் இந்த தேவாலயம் பல போராட்டங்கள் மற்றும் சமயப்பரப்பு முயற்சிகளின் கதைகளை தன்னுள் கொண்டுள்ளது.

ஸ்ரீ வல்லப கோயிலில் கொண்டாடப்படும் பண்டிகைகள் மற்றும் சடங்குகளுக்கு இணையாக இந்த தேவாலயத்திலும் நிறைய திருவிழாக்கள் கொண்டாடப்படுவது ஒரு ஆச்சரியமான விஷயமாகும்.

இது ஹிந்து மற்றும் கிறிஸ்துவ மார்க்கங்கள் பலகாலமாக ஒன்றாக பின்பற்றப்பட்டு வந்திருப்பதை புலப்படுத்துகிறது. ஏப்ரல்- மே மாதத்தில் ஸ்ரீ வல்லப கோயிலில் கொண்டாடப்படும் 10 நாள் திருவிழாவைப்போல் இந்த தேவாலயத்திலும் 10 நாள் திருவிழா ஒன்று அனுஷ்டிக்கப்படுகிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
31 Mar,Tue
Check Out
01 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed