Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » திருநெல்வேலி » ஈர்க்கும் இடங்கள் » ஸ்ரீ வரதராஜபெருமாள் கோவில்

ஸ்ரீ வரதராஜபெருமாள் கோவில், திருநெல்வேலி

22

ஸ்ரீ வரதராஜ பெருமாளின் தீவிர பக்தரான கிருஷ்ணவர்மா என்னும் மன்னரால் பல நூற்றாண்டுக்கு முன்னர் ஸ்ரீ வரதராஜபெருமாள் கோவில் கட்டப்பட்டது.  முன்னொரு காலத்தில், மன்னர் கிருஷ்ணவர்மா  அண்டைநாட்டு மன்னரால் தாக்கப்பட்டபோது, வீரராகவன் என்னும் பெயருடைய வீரராக ஸ்ரீ வரதராஜபெருமாள், மன்னருக்கு உதவியதாகவும், அவ்வீரரின் நினைவாக மன்னர் கிருஷ்ணவர்மா இக்கோவிலை கட்டியதாகவும் செவிவழிக்கதைகள் கூறுகின்றன.

வீரராகவபுரம் என்னும் ஒரு ஊரையும், மன்னர் கிருஷ்ணவர்மா உருவாக்கினார். இக்கோவில் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ளது. இக்கோவிலின் மூலவர் வீரராகவசுவாமி எனவும், உற்சவமூர்த்தி ஸ்ரீ வரதராஜபெருமாள் எனவும் அழைக்கப்படுகின்றனர்.

இக்கோவிலில் திருவிழாக்கள் நடைபெறும்பொழுது இக்கோவிலுக்குச் செல்வது சிறப்பாக இருக்கும். தமிழ்மாதமான சித்திரையில்( ஏப்ரல்-மே)கொண்டாடப்படும் பிரம்மோற்சவத்தின் போது இக்கோவிலுக்குச் செல்வது ஆனந்தமான அனுபவமாக அமையும்.

கோவிலின் நடை திறந்திருக்கும் நேரம் காலை 7.00 மணி முதல் 11.00 மணி வரை மற்றும் மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை ஆகும்.

திருநெல்வேலி ஹோட்டல்கள்

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
18 Aug,Tue
Return On
19 Aug,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
18 Aug,Tue
Check Out
19 Aug,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
18 Aug,Tue
Return On
19 Aug,Wed