ராஜஸ்தான் மாநிலத்தில் டோங்க் மாவட்டத்திலுள்ள இந்த மண்டகாலா எனும் கிராமம் நாகர்ஃபோர்ட் ஸ்தலத்திலிருந்து 2 கி.மீ தூரத்தில் உள்ளது. இது ராஜஸ்தான் மாநிலத்தின் ‘சிறிய புஷ்கர்’ என்று சிறப்பைப்பெற்றுள்ளது. எண்ணற்ற மரங்கள் மற்றும் பசுமையான இயற்கை வனப்புடன் காட்சியளிக்கும் இந்த ஸ்தலம் காதலர்களுக்கு மிகவும் பிடித்த இடமாக அறியப்படுகிறது.
மண்டவா ரிஷி எனும் முனிவர் இங்கு தவம் புரிந்ததாக நம்பப்படுகிறது. இங்கு வருடா வருடம் கொண்டாடப்படும் ஒரு திருவிழாவின்போது சுற்றுவட்டாரங்களிலிருந்து ஏராளமான மக்கள் இங்கு கூடுகின்றனர். இங்குள்ள முச்குண்டேஷவர் மஹாதேவ் எனும் சிவன் கோயில் தன் 4 அடி உயர சிவலிங்கத்திற்காக மிகவும் பிரசித்தமாக அறியப்படுகிறது.



Click it and Unblock the Notifications