ஆக்ரா என்றதுமே அனைவருக்கும் நினைவிற்கு வருவது உலக அதிசயங்களில் ஒன்றாகவும், அழகிய காதல் சின்னமாகவும் இருக்கும் தாஜ்மஹால் தான். ஆக்ரா செல்லும் பலரும் தாஜ் மஹாலை மட்டும் பார்த்து விட்டு திரும்பி விடுகிறார்கள். ஆனால் இங்கு தாஜ் மஹால் தவிர பார்ப்பதற்கு ஏராளமான இடங்கள் உள்ளன. அப்படி ஆக்ராவில் அவசியம் பார்க்க வேண்டிய 10 இடங்கள் பற்றி உங்களுக்கு தெரியவில்லை என்றால், இதை படிச்சு அவசியம் தெரிஞ்சுக்கோங்க.

தாஜ் மஹால்
தாஜ் மஹால் என்பது உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாகும். இது முகலாய பேரரசர் ஷாஜகான், தனது அன்பு மனைவி மும்தாஜ் நினைவாக கட்டிய சிற்பக்கலை ஆச்சரியம் ஆகும். இது முற்றிலும் வெள்ளை மார்பிள் கல்லால் கட்டப்பட்டது. இது யுனெஸ்கோ உலகப் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. யமுனை கரையில் அமைந்துள்ள பளிங்கு மாளிகையை காண இரு கண்கள் போதாது
மெஹ்தாப் பாக்
மெஹ்தாப் பாக் என்பது தாஜ்மகாலின் நேருக்கு நேர் அமைந்துள்ள ஒரு அழகிய தோட்டம் ஆகும்.தாஜ்மஹாலை ஒரு பிரம்மாண்டமான கோணத்தில் பார்க்க சிறந்த இடம்.ஷாஜகான் இதை "முழு நிலவில் ஒளிவீசும் தோட்டம்" என்று அழைத்தார்.பல அரிய பூக்கள், மரங்கள், நீர்வேலிகள் மற்றும் நடக்கத் தகுந்த பாதைகளுடன் அமைந்துள்ளது. இந்த அழகிய தோட்டம் அருமையான புகைப்படங்கள் எடுக்க ஏற்ற இடம் ஆகும்.

ஆக்ரா கோட்டை
ஆக்ரா கோட்டை என்பது இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் முக்கியமான கலாச்சார நினைவுச் சின்னங்களில் ஒன்றாகும். யுனெஸ்கோ உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்ட இது, முகலாயப் பேரரசின் அதிகார மையமாக இருந்தது.கோட்டையில் உள்ள ஜாஹங்கீர் மஹால், திவான்-இ-ஆம், திவான்-இ-காஸ், மோத்தி மசூதி, கவால் மஹால் போன்ற கட்டிடங்கள் முக்கியமானவை.
இதிமத்-உத்-தௌலாவின் கல்லறை
இதிமத்-உத்-தௌலாவின் கல்லறை என்பது "பேபி தாஜ்" அல்லது "பச்சை தாஜ்மகால்" என அழைக்கப்படும் முகலாய கட்டிடக்கலையின் மற்றொரு அற்புதமாகும். இது ஆக்ராவின் மிக அழகிய நினைவுச்சின்னங்களில் ஒன்றாகும்.கல்லறையின் சுவர் முழுவதும் பாரசீக பாணியில் பொன்னாகக் பொலிந்த பச்சை, செம்மண், மஞ்சள் நிற ஓவியங்கள் கொண்டவை.

ஃபதேபூர் சிக்ரி
ஃபதேபூர் சிக்ரி, முகலாயப் பேரரசர் அக்பர் உருவாக்கிய புகழ்பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க நகரம். இது 1571-ல் கட்டப்பட்டு, சில ஆண்டுகள் முகலாய பேரரசின் தலைநகராக இருந்தது. சிறிது காலத்திற்கே தலை நகரமாக இருந்தாலும், இதன் கலாச்சாரம் மற்றும் கட்டிடக்கலையில், பேரரசர் அக்பரின் ஆட்சியின் மகத்துவத்தை எடுத்துக்காட்டுகின்றன.புலந்த் தர்வாசா,பஞ்ச் மஹால், ஜமா மசூதி போன்றவை முகலாயக் கட்டிடக்கலையின் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.
அக்பரின் சமாதி
முகலாயப் பேரரசின் மகத்தான அரசரான அக்பர் (Jalal-ud-din Muhammad Akbar) நினைவாக கட்டப்பட்ட புகழ்பெற்ற நினைவுச்சின்னம் ஆகும். இது ஆக்ராவின் சிகந்தரா பகுதியில் அமைந்துள்ளது. இது ரெட் ஸாண்ட்ஸ்டோன் (சிவப்பு மண்கல்) மற்றும் வெள்ளை பளிங்கு கலவையால் உருவாக்கப்பட்டது. அக்பரின் வாழ்க்கை மற்றும் பாரம்பரியத்தை உணர ஒரு சிறந்த இடம்.
சதர் பஜார்
சதர் பஜார் என்பது அக்ராவின் மிகவும் பிரபலமான மார்க்கெட், குறிப்பாக தாஜ் மஹோத்சவம் நேரத்தில் வழக்கத்திற்கு மாறாக இன்னும் உயிர்ப்புடன் இருக்கும். இது உணவு, கைபேக்ஸ், தோல் பொருட்கள், மற்றும் நினைவுச்சின்னங்கள் வாங்க சிறந்த இடம்.தாஜ் மஹோத்சவம் நேரத்தில் அழகிய கைவினைப் பொருட்கள், பாரம்பரிய உடைகள் வாங்க சிறந்த சந்தையாகும்.
தாஜ் அருங்காட்சியகம்
தாஜ் அருங்காட்சியகம், தாஜ்மஹாலின் உலக வரலாற்றையும், அதன் கட்டிடக்கலையின் தனித்துவத்தையும் விளக்கும் சிறப்பான இடம். இது தாஜ்மகாலின் உள் பகுதியாக உள்ள ஜல்மஹால் (Jalmahal) பகுதியில் அமைந்துள்ளது.தாஜ்மகாலை பற்றிய நகல் வரைபடங்கள் மற்றும் ஸ்கெட்ச்கள்,முகலாய கால சிற்பங்கள் மற்றும் ஓவியங்கள்,முகலாய கால அரசர் மற்றும் அரசிகளின் ஆயுதங்கள் மற்றும் ஆடைத் தொகுப்புகள் போன்றவற்றை இங்கே காணலாம்.
ஜூமா மசூதி
ஜூமா மசூதி என்பது ஆக்ராவின் மிகப்பெரிய மற்றும் புகழ்பெற்ற மசூதிகளில் ஒன்று. முகலாய கட்டிடக்கலையின் பாரம்பரியத்தை உணர்த்தும் சிறந்த இடம். மசூதி அருகில் உள்ள கைத்தறி மற்றும் பராம்பரிய சந்தைகள், சுற்றுலாப் பயணிகளுக்கு மிக சிறந்த அனுபவமாக இருக்கும்.தாஜ் மஹோத்சவம் காலத்தில், மசூதியின் சுற்றுப்புறம் பாரம்பரிய கலைகளால் நிறைந்திருக்கும்.
சினி கா ரௌசா
சினி கா ரௌசா, முகலாய அரசர் ஷாஜகானின் பிரதம அமைச்சரும் கவிஞருமான அப்சல் கானின் (Afzal Khan Mullah) நினைவாக கட்டப்பட்ட ஒரு அழகிய கல்லறை. இது ஆக்ராவில், யமுனை நதியின் கரையில் அமைந்துள்ளது.முகலாய மரபின் கலைநயத்தையும், சிற்பங்களையும் உணர ஓர் சிறந்த இடம்.



Click it and Unblock the Notifications





