நாம் எங்கு பிறந்து வளர்ந்தோமோ, அந்த இடம் நமக்கு சொர்க்கம் தான். நம் ஒவ்வொருவருக்குமே அவர்கள் வாழ்ந்து வந்த ஊர் சிறப்பான இடம் தான். கிராமம் என்றாலே நிறைந்த குளங்கள், வயல் வெளிகள், அழகிய கோவில்கள், நெருக்கமான வீடுகள் போன்றவை காட்சியளிக்கும்.
அதுவே, சென்னை போன்ற நகரம் என்று பார்த்தால் சற்று கிராமங்களை விட மாறுபாடு இருக்கும். கிராமமோ, நகரமோ எங்கு வாழ்ந்தாலும், நம்முடைய சொந்த ஊர் நமக்கு எப்போதும் கிடைத்த பாக்கியம் என்றே சொல்வோம்.
அப்படி இருக்கும் போது, மேற்குத் தொடர்ச்சி மலை என்ற அரசி, தன் பச்சை பசேல் என்ற கூந்தலை விரித்தாற் போல இருக்கும் கோயம்புத்துார் என்ற ஊரை விட்டு, பிழைப்புக்காக இடம்பெறும் போது நம் ஆழ் மனதில் ஓடும் எண்ணங்கள் அலைபாயும் போது ஒரு கணம் கண்ணீர் சிந்துவது போல் இருக்கும் அல்லவா...!

தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படுவது கோயம்புத்தூர் மாநகரம். தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரமாக கருதப்படும் கோயம்புத்தூர், இந்தியாவின் மிக முக்கிய நகரங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது.
நொய்யல் ஆற்றின் படுகையில் அமைந்துள்ள கோவை நகரம், மேற்குத் தொடர்ச்சி மலைகளால் சூழப்பட்டுள்ளது. தமிழகத்தில் மிக அழகான நகரங்களில் ஒன்றாக கோயம்புத்தூர் நகருக்கு வயது 220.
அதேபோல தென்னிந்தியாவின் நுழைவாயியான சிங்கார சென்னையில், வரலாறு நிகழ்காலத்துடன் தங்கு தடையின்றி கலக்கிறது; ஒரு சுற்றுலா பயணியை முற்றிலும் வேறுபட்ட அனுபவங்களைக் கண்டு வியக்க வைக்கிறது.

ஒரு வகையில், அரக்க பரக்க இயங்கும் சுறுசுறுப்பான பெருநகரம், மறுபுறம், கலாசாரம், கலை, மருத்துவம் மற்றும் கற்றல் மையமாக திகழ்கிறது. பைந்தமிழ் நிலத்தின் பன்முக தலைநகரான சென்னைக்கு வருக வருக...!
இங்க பாருங்க...! 'காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு' என்பது போல, சொந்த ஊர் எல்லோருக்கும் அப்படி தானே... என்னையே எடுத்துக்கோங்க... வேலைக்காக நெல்லை சீமையில் இருந்து பெரு நகரமான சென்னைக்கு வந்து 16 ஆண்டுகளாகிறது. என்னதான் இருந்தாலும் என் ஊருக்கு போக போறேன் என்றதும், என் ஆழ் மனதுக்குள் வரும் உணர்வை என்னை போன்று சொந்த ஊரை விட்டு வந்தவங்களுக்கு தான் புரியும்.
ஏனுங்க கோவையன்ஸ்... உண்மையை சொல்லுங்க... ஊரில் தண்ணீர் வற்றாத ஆறு, ஏரிகள் மற்றும் குளங்கள். விடுமுறை என்றாலே, நீங்களும், உங்கள் நண்பர்களும் குளிப்பதற்கு ஊரில் அமைந்துள்ள நீர் நிலையங்களுக்கு சென்று குளித்து மகிழ்ச்சியாக இருப்பது போன்ற விஷயங்களை எல்லாம் கானல் நீராக ஆகும்.

மருதமலை கோவில், வைதேகி நீர்வீழ்ச்சி, வெள்ளையங்கிரி மலை, வெள்ளையங்கிரி சிவன் கோவில், கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சி, சிறுவாணி நீர்வீழ்ச்சி, சிறுவாணி அணைக்கட்டு, சுப்பிரமணியர் கோவில், குரங்கு நீர்வீழ்ச்சி, நேரு பூங்கா, கீடி கார் அருங்காட்சியகம், பரளிக்காடு வனத்துறை, சிங்காநல்லுாரி ஏரி, என, அடுக்கி கொண்டே போகலாம்.
ஏனுங்க கொஞ்சம் கேளுங்க... இதை எல்லாம் நீங்கள் மட்டுமில்லை நானும் மிஸ் பண்ணுவேன். ஹலோ நீங்க கோவைங்களா? ஆமாங்கனு சொன்னா நம்பக்கூடாது.
அழகான குடும்பம், வீடு, மறக்க முடியாத பக்கத்துக்கு வீட்டினர்கள், சிறுவயது நண்பர்கள், சிறுவயதில் ஓடி திரிந்த வயல் வெளிகள், பள்ளி சென்ற நினைவுகள், கொண்டாடி திரிந்த கோவில் திருவிழாக்கள், பாசத்தை பொழியும் உறவினர்கள் என, ஊரின் நினைவுகள் உலகத்தின் எந்த கோடியில் இருந்தாலும் மனதில் இருந்து கொண்டே இருக்கும்.

மனிதர்கள் நாள் முழுவதும் உழைத்து களைத்த பின் ஓய்வெடுக்க தாய் மடியினை தேடுவது போல வெளிநாடுகள் மட்டும் இல்லை, வெளியூரில் இருந்தாலும் சொந்த ஊரை தான் எல்லோரும் தேடுவோம்ல...!
ஹலோ என்ன ரொம்ப பீல் பண்ணுறீங்க..! சென்னை என்ற பெரு நகரம், அப்ப நரகம்னு சொல்லுறீங்களா... இங்க பாருங்க நான் அப்படி சொல்லவில்லை... உங்கள் ஊரில் நான் மேற்குறிப்பிட்ட விஷயங்களை நீங்களும் மிஸ் பண்ணினா... அதுவும் சொர்க்கம் தான்... சரி நான் வருகிறேன்... ஏனுங்க கோவையன்ஸ் 'வீ டூ மிஸ் ஹவர் நேட்டிவ்'



Click it and Unblock the Notifications






